Loading...
விலையைக் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க! iPhone Duo திரை பழுதுபார்ப்புக் கட்டணம் $999! சாம்சங்கை விட 2 மடங்கு அதிகம்
iPhone Duo திரை பழுதுபார்ப்புக் கட்டணம் $999

விலையைக் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க! iPhone Duo திரை பழுதுபார்ப்புக் கட்டணம் $999! சாம்சங்கை விட 2 மடங்கு அதிகம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 15, 2026
05:28 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான iPhone Duo-வை அக்டோபர் 23, 2026 அன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வப் பழுதுபார்ப்புக் கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, AppleCare+ காப்பீடு இல்லாத பயனர்கள் அதன் உட்புறத் திரையை (Inner Display) மாற்ற $999 (சுமார் ₹84,000) செலுத்த வேண்டும். மேலும், ஃபோனின் பிற கடுமையான சேதங்களுக்கு பழுதுபார்ப்புக் கட்டணம் அதிகபட்சமாக $1,499 வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பீடு

சாம்சங் கேலக்ஸி Z Fold 8-உடன் ஒப்பீடு

$1,999 ஆரம்ப விலையைக் கொண்ட ஒரு போனுக்கு இந்த பழுதுபார்ப்புக் கட்டணம் மிகவும் அதிகமாகக் கருதப்படுகிறது.

போட்டி நிறுவனமான சாம்சங்கின் Galaxy Z Fold 8 மாடலின் உட்புறத் திரையை மாற்ற அமெரிக்காவில் $419 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

இதனுடன் ஒப்பிடுகையில் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone Duo திரை பழுதுபார்ப்புக் கட்டணம் $580 அதிகமாகும்.

மேலும், சாம்சங்கின் அல்ட்ரா மாடலின் திரை பழுதுபார்ப்புக் கட்டணம் $479 ஆகவும், ட்ரைஃபோல்ட் (TriFold) மாடலின் கட்டணம் $699.50 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டியல்

AppleCare+ இல்லாதவர்களுக்கான முழு பழுதுபார்ப்புக் கட்டணப் பட்டியல்

உட்புறத் திரை (Inner Display): $999

இதர சேதங்கள் (Other Damage): $1,499

வெளிப்புறத் திரை (Outer Display): $379

பின்புறக் கேமரா & பேட்டரி: தலா $229

பின்புறக் கண்ணாடி (Back Glass): $199

பிரத்யேக கவர் லேயர் (Cover Layer): $49

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விலைப் பட்டியல், காப்பீடு பெறாத பயனர்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

சலுகைகள்

AppleCare+ வழங்கும் சிறப்பான சலுகைகள்

AppleCare+ காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த பழுதுபார்ப்புக் கட்டணங்கள் பெருமளவில் குறைகின்றன.

இத்திட்டத்திற்கு மாதத்திற்கு $19.99 அல்லது ஆண்டுக்கு $199.99 (முன்கூட்டியே செலுத்தினால் $399) கட்டணமாகும்.

AppleCare+ வைத்திருப்பவர்களுக்கு உட்புறத் திரை பழுதுபார்ப்பு மற்றும் இதர விபத்துச் சேதக் கட்டணம் வெறும் $99 மட்டுமே ஆகும்.

வெளிப்புறத் திரை மற்றும் பின்பக்கக் கண்ணாடியை மாற்ற $29 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பேட்டரி திறன் 80%-க்கும் கீழே குறைந்தால் இலவசமாக மாற்றித்தரப்படும்.

ADVERTISEMENT