
புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்!
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
வருமான வரி கால்குலேட்டர் மூலம் எளிதாக, அடுத்த நிதியாண்டுக்கான உங்களின் சொந்த வருமான வரியை நீங்கள் கணக்கீடு செய்துகொள்ள முடியும்.
அதன்பின், பழைய வருமான வரி முறை vs புதிய வருமான வரி முறை என்பது விவாதப் பொருளாகிவிட்டது.
இந்த இரண்டு வரி முறைகளில் எது பயனளிக்கும் என்பது வரி செலுத்துவோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட்டின் மூலம், புதிய வருமான வரி முறையில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், புதிய வருமான வரி முறையில் வருமான வரி சலுகைகளும் கிடையாது.
வருமானத்துறை
வருமான வரி கால்குலேட்டர் அறிமுகம் - எப்படி கணக்கிடலாம்?
ஆனால், பழைய வருமான வரி முறையில் வரியை சேமிக்க உதவும் பல்வேறு சலுகைகள் இருக்கின்றன.
பட்ஜெட்டில் பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக, உச்சவரம்பு உயர்வு பழைய வருமான வரி முறைக்கு கிடையாது.
இந்நிலையில், தனிநபர்கள் தங்களுக்கு எந்த வருமான வரி முறை சிறந்தது என்பதை தேர்வு செய்வதற்காக வருமான வரி இணையதளத்தில் புதிதாக வரி கால்குலேட்டரை (Tax Calculator) அறிமுகப்படுத்தியுள்ளது வருமான வரித் துறை.
இந்த கால்குலேட்டர் மூலம் நீங்கள் உங்களுக்கு எந்த வருமான வரி முறை உகந்தது என்பதை கணக்கிட்டு தேர்வு செய்துகொள்ள முடியும்.
இந்த ஒரு வரி கால்குலேட்டர் தற்போது வருமான வரி இணையதளத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகவும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.