கணையப் புற்றுநோய்க்கு புதிய திருப்புமுனை மருந்து: அமெரிக்க FDA ஒப்புதலால் நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை
செய்தி முன்னோட்டம்
அண்மையில் Merck மற்றும் Moderna நிறுவனங்களின் தோல் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புற்றுநோய் மருத்துவத் துறையில் மற்றொரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முற்றிய நிலை கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 'Rasonque - Daraxonrasib என்ற புதிய இலக்கு அடிப்படையிலான மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
ஆய்வு
மருத்துவ ஆய்வில் கிடைத்த அபார வெற்றி
ரெவொல்யூஷன் மெடிசின்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, 500 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் ஒப்புதல் பெற்றுள்ளது.
வழக்கமான கீமோதெரபி சிகிச்சை பெற்ற நோயாளிகளின் சராசரி வாழ்நாள் 6.7 மாதங்களாக இருந்த நிலையில், ராசோன்க் மாத்திரை உட்கொண்ட நோயாளிகளின் சராசரி வாழ்நாள் 13.2 மாதங்களாக (இரண்டு மடங்கு) உயர்ந்துள்ளது.
கீமோதெரபியுடன் ஒப்பிடுகையில் இந்த மருந்து உயிரிழப்பு அபாயத்தை 60% வரை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செயல்பாடு
மருந்து எவ்வாறு செயல்படுகிறது?
கணையப் புற்றுநோய் கட்டி வளர்வதற்கு காரணமான RAS எனப்படும் புரத குடும்பத்தை குறிவைத்து அழிக்கும் வகையில் இந்த வாய்வழி மாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பதிவாகும் கணையப் புற்றுநோய் வழக்குகளில் 90% முதல் 95% வரை கணைய அடினோகார்சினோமா வகையைச் சேர்ந்தவை என்பதால், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியாத இந்த நோய்க்கு இப்புதிய மருந்து சிறந்த மாற்று சிகிச்சையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்தின் சிறப்பான செயல்திறன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 6.5 மாதங்களுக்கு முன்பாகவே எஃப்டிஏ இதற்கு விரைவு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு மூலம் பெறக்கூடிய இந்த மருந்தின் 30 நாட்களுக்கான செலவு 39,800 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.