Page Loader
விண்வெளி பயணத்திற்குப் பிறகு சுபன்ஷு சுக்லா தனது குடும்பத்தை சந்தித்த உணர்வுபூர்வ தருணம்! 
சுபன்ஷு சுக்லா தனது குடும்பத்தை சந்தித்த உணர்வுபூர்வ தருணம்!

விண்வெளி பயணத்திற்குப் பிறகு சுபன்ஷு சுக்லா தனது குடும்பத்தை சந்தித்த உணர்வுபூர்வ தருணம்! 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2025
08:22 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்திற்குப் பிறகு இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த உணர்வுபூர்வமான தருணத்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த உணர்வுபூர்வமான படங்கள், பெருமை, நிம்மதி மற்றும் ஆழ்ந்த உணர்ச்சிகள் நிறைந்த ஒரு தருணத்தை வெளிப்படுத்துகிறது. பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமான தரையிறங்கலுக்கு பின்னர் சுக்லா, ஹூஸ்டனில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட வசதியில் அவரது குடும்பத்தினரால் வரவேற்கப்பட்டார். அங்கு மீண்டும் இணைவதற்கு முன்பு ஆரம்ப மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சுபன்ஷு ஷுக்லா இப்போது ISS-ஐப் பார்வையிட்ட முதல் இந்தியர் மற்றும் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருகமைகளுக்கு சொந்தக்காரர்.

தருணம்

குடும்பத்தினருடன் இணைந்த தருணம்

கணவர் சுபன்ஷு சுக்லாவை சந்தித்தபோது, அவரது மனைவி கம்னா அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல, சுக்லா தனது நான்கு வயது மகனை ஆரத்தழுவி அரவணைத்துக்கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு விண்வெளி வீரர் தனது குடும்பத்தினரைச் சந்திப்பது இதுவே முதல் முறை. "விண்வெளிப் பயணம் அசாதாரணமானது, ஆனால் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைவதற்கு ஈடாக எதுவும் இல்லை. பூமிக்குத் திரும்பி வந்து இறுதியாக என் குடும்பத்தை மீண்டும் அரவணைத்துக் கொண்டது - அது உண்மையிலேயே வீட்டிற்கு வருவது போல் உணர்ந்தேன்" என ஷுக்லா இந்த தருணத்தை விவரித்தார். அவர் விண்ணிற்கு ஏவப்படுவதற்கு முன்பு 2 மாதங்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தலில் இருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post