Loading...
மாணவர்களுக்கு ஜாக்பாட்! அடோப் போட்டோஷாப் 1 வருஷத்துக்கு இலவசம்; எப்படி பெறுவது?
அடோப் போட்டோஷாப் 1 வருடம் இலவசம்

மாணவர்களுக்கு ஜாக்பாட்! அடோப் போட்டோஷாப் 1 வருஷத்துக்கு இலவசம்; எப்படி பெறுவது?

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு அடோப் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடோப் போட்டோஷாப் மென்பொருளின் ஒரு வருடத்திற்கான சந்தா தகுதியுள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. வழக்கமாக ஆண்டிற்கு ரூ.1,999 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த சிறப்பு சலுகையின் மூலம் மாணவர்கள் 100 சதவீதத் தள்ளுபடியைப் பெற முடியும். அடோப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே இந்த சலுகையைப் பெற இயலும்.

முக்கிய விதிமுறைகள்

சந்தா புதுப்பித்தல் மற்றும் முக்கிய விதிமுறைகள்

மாணவர்கள் இந்த சலுகையின் கீழ் முதல் ஆண்டை முற்றிலும் இலவசமாகப் பெறலாம்.

இருப்பினும், 12 மாத கால அளவு முடிந்த பிறகு, இந்தச் சந்தா ரத்து செய்யப்படாவிட்டால் தானாகவே ஆண்டுக்கு ரூ.1,999 என்ற வழக்கமான கட்டணத்தில் புதுப்பிக்கப்படும்.

எனவே, கட்டண சந்தாவைத் தொடர விரும்பாத மாணவர்கள், இலவச காலம் முடிவதற்கு முன்பாக தங்களது கணக்கில் சென்று புதுப்பித்தலை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த சலுகை எந்தவித முன்அறிவிப்பும் இன்றி முடிவுக்கு வரக்கூடும் என்பதால் விரைந்து விண்ணப்பிப்பது சிறந்தது.

வழிமுறைகள்

இலவச போட்டோஷாப் சந்தாவைப் பெறுவதற்கான வழிமுறைகள்

இலவச சலுகையைப் பெற முதற்கட்டமாக அடோப் தளத்தில் உள்ள Photoshop Student Offer பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு உங்களின் அடோப் கணக்கில் உள்நுழைய வேண்டும். கணக்கு இல்லாதவர்கள் புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.

பின்னர் செக்-அவுட் பக்கத்தில் உங்களது கல்லூரி விவரங்களை சரியாகப் பதிவிட வேண்டும்.

பணம் செலுத்தும் முறைகளில் UPI என்பதைத் தேர்ந்தெடுத்து, யுபிஐ செயலி மூலம் AutoPay கோரிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

கணக்கை சரிபார்க்க ரூ.2 டோக்கன் கட்டணமாகப் பிடிக்கப்படும்.

ADVERTISEMENT

பதிவிறக்கம்

மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் மாணவர்களுக்கான பயன்பாடு

யுபிஐ சரிபார்ப்பு செயல்முறை வெற்றிகரமாக முடிந்தவுடன், அடுத்த 12 மாதங்களுக்கு போட்டோஷாப் சந்தா கணக்கில் உடனடியாக செயல்படத் தொடங்கும்.

இதன் பிறகு, கணினியில் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் செயலியைப் பதிவிறக்கம் செய்து போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

புகைப்படங்களைத் திருத்துதல், கிராஃபிக் டிசைனிங் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்த பண்டிகைக் கால இலவச சலுகை ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT