LOADING...
25 ஆண்டுகால 'Adobe Animate' விடைபெறுகிறது; AI அலைகளால் ஒரு சகாப்தம் முடிவு!
25 ஆண்டுகால ஆதிக்கம் 'Adobe Animate' விடைபெறுகிறது

25 ஆண்டுகால 'Adobe Animate' விடைபெறுகிறது; AI அலைகளால் ஒரு சகாப்தம் முடிவு!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 03, 2026
04:27 pm

செய்தி முன்னோட்டம்

டிஜிட்டல் அனிமேஷன் உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த Adobe Animate மென்பொருளை தற்காலிகமாக நிறுத்திவிட அடோப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முற்காலத்தில் 'ஃபிளாஷ்' (Flash) என்று அழைக்கப்பட்ட இந்த மென்பொருள், இணைய அனிமேஷன்கள் மற்றும் கேம் டிசைனிங்கில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அடோப் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மார்ச் 1, 2026 முதல் அனிமேட் மென்பொருள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படும். அன்று முதல் புதிய வாடிக்கையாளர்கள் இதை வாங்கவோ அல்லது பதிவிறக்கம் செய்யவோ முடியாது. இருப்பினும், ஏற்கனவே இதை பயன்படுத்தி வரும் தனிநபர் பயனர்களுக்கு மார்ச் 2027 வரையிலும், பெரிய நிறுவன (Enterprise) வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 2029 வரையிலும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்படும்.

காரணம்

AI கருவிகளுக்கு மாறியதால் மூடுவிழா

அடோப் நிறுவனம் தனது கவனத்தை முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த படைப்பாற்றல் கருவிகளுக்கு மாற்றியுள்ளது. நவீன தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப புதிய தளங்கள் உருவாகியுள்ளதால், அனிமேட் மென்பொருள் தனது கடமையை சிறப்பாக செய்து முடித்துவிட்டதாக அடோப் தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக, சிக்கலான அனிமேஷன்களுக்கு 'After Effects' மற்றும் எளிய வேலைகளுக்கு 'Adobe Express' மென்பொருள்களை பயன்படுத்த அடோப் பரிந்துரைக்கிறது. இந்த அறிவிப்பு நீண்டகால அனிமேஷன் கலைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், புதிய AI தொழில்நுட்பங்கள் அனிமேஷன் துறையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் என அடோப் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement