LOADING...
இளைஞர்களை குறிவைக்கும் புற்றுநோய்! 20 முதல் 40 வயதினருக்கு பாதிப்பு 79% அதிகரிப்பு
புற்றுநோய் முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்ற காலம் மலையேறிவிட்டது

இளைஞர்களை குறிவைக்கும் புற்றுநோய்! 20 முதல் 40 வயதினருக்கு பாதிப்பு 79% அதிகரிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
02:51 pm

செய்தி முன்னோட்டம்

புற்றுநோய் என்பது பரம்பரை ரீதியானது அல்லது முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்ற காலம் மலையேறிவிட்டது. 1990 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இளைஞர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு உலகளவில் 79% அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டு தி லான்செட் வெளியிட்ட ஒரு ஆய்வில், அமெரிக்காவில் 17 வகையான புற்றுநோய்களின் நிகழ்வு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில், குறிப்பாக 1990க்கு பிறகு பிறந்தவர்களிடையே படிப்படியாக அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது. சிறுகுடல் மற்றும் கணைய புற்றுநோய்களில் அதிக அதிகரிப்பு காணப்பட்டதாக ஆய்வு கூறுகிறது.

முக்கிய காரணங்கள் #1

இளைஞர்களிடம் புற்றுநோய் அதிகரிக்க முக்கிய காரணங்கள்

1. அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கின்றன. இது கணையம், சிறுநீரகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகிறது. 2. மொபைல் போன் பயன்பாட்டால் தூக்கம் குறைவது மெலடோனின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கிறது. இது செல்களை பாதுகாக்கும் திறனை குறைத்து மார்பக மற்றும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. 3. மது அருந்துவதால் உடலில் உருவாகும் 'அசிட்டால்டிஹைட்' (Acetaldehyde) DNA-வை சிதைக்கிறது. குறிப்பாக 'பிஞ் டிரிங்கிங்' (Binge drinking) எனப்படும் ஒரே நேரத்தில் அதிக மது அருந்துவது மார்பக மற்றும் வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

முக்கிய காரணங்கள் #2

இளைஞர்களிடம் புற்றுநோய் அதிகரிக்க முக்கிய காரணங்கள்

4. நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு மற்றும் குடிநீரில் கலந்துள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் 'ஃபாரெவர் கெமிக்கல்ஸ்' (PFAS) புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. 5. தாயின் மருந்துகள்: கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் எடுத்துக்கொண்ட சில குறிப்பிட்ட மருந்துகள் (எ.கா: குமட்டல் எதிர்ப்பு மருந்துகள்), அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வளர்ந்த பிறகு புற்றுநோய் வர 3.6 மடங்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

Advertisement

தற்காப்பு

பாதுகாத்துக் கொள்வது எப்படி?

சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி. மது மற்றும் புகையிலையை முற்றிலும் தவிர்த்தல். தூங்குவதற்கு முன் ஸ்கிரீன் நேரத்தை குறைத்தல். HPV மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல். முன்கூட்டியே பரிசோதனைகள் (Screening) செய்து கொள்ளுதல். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையுமே இதற்கான சிறந்த தீர்வு.

Advertisement