தொடரும் திருமண விபத்துகள்; நீங்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு முறைகள்
திருமணங்கள் என்றாலே, காதல், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டமான தருணங்களை உருவாக்க முடியும். அதிலும், சமீபகாலமாக இந்தியத் திருமணங்களில் ஆடம்பரம் பெருகி வருகிறது. தற்போது இருக்கும் 'ரீல்ஸ்' தலைமுறையினர், எதைப் பார்த்தாலும், எதை செய்தாலும் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, லைக்ஸ் பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். அதுபோல சமீபத்தில், பல திருமண விழாக்களில், வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என ஆபத்தாகவும், விபத்திலும் போய் முடிவடைந்துள்ளது. இது மிகப்பெரிய கவலையை தரும் விஷயமாக உள்ளது. இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, திருமண விழாக்களில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு விஷயங்கள் இதோ:
சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்ட மண்டபங்களை தேர்வு செய்யவும்
ஃப்ளேர் துப்பாக்கிகளை கவனமாகப் பயன்படுத்தவும்: துப்பாக்கியில் இருந்து நெருப்பு பொறி வருவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகை துப்பாக்கிகள், சில நேரங்களில் ஆபத்தாக மாறலாம். அதனால், கவனத்துடன் பயன்படுத்தவும், முடிந்தால் பயன்படுத்துவதை தவிர்க்கவும். பிரமாண்ட மணமக்கள் என்ட்ரி: அந்தரத்தில் இருந்து என்ட்ரி தருவது, கிரேன் மூலம் மேலே தூக்கப்படுவது போன்ற பிரம்மாண்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் சரிவர கடைபிடிக்கப்பட்டுள்ளதை மேற்பார்வையிடவும். பாதுகாப்பான திருமணத்தை உறுதிசெய்ய, நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும்,மதிப்பிடுவது அவசியம். குறிப்பாக, தீயை அணைக்கும் கருவிகள், புகை கண்டறியும் கருவிகள் மற்றும் அவசரகால வெளியேறும் பலகைகள் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உள்ளனரா என்பதை சரிபார்க்கவும். அதேபோல, சான்றிதழ் பெற்ற வெட்டிங் பிளானர்களை மட்டுமே தேர்வு செய்யவும்.