இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா!
இந்தியாவில் உள்ள, 37 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில், 12 மத முக்கியத்துவம் வாய்ந்த, புனிதமான தளங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த 12 தளங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவின் கலைத்திறமையை பறைசாற்றும் சான்றாக கருதப்படுகிறது. அவை: பிஹாரின் மகாபோதி ஆலயம்: கி.பி 5- 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும், இந்த ஆலயம், மிகப்பெரிய பௌத்த வளாகத்தின், எஞ்சி இருக்கும் ஒரு பாகம் என கூறப்படுகிறது. கோவாவின் தேவாலயங்கள் மற்றும் கான்வென்ட்கள்: 16-18ஆம் நூற்றாண்டுகளில், போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டவை இந்த தேவாலயங்கள். எலிஃபாண்டா குகைகள்: இங்கு 2 பௌத்தம் மற்றும் 5 ஹிந்து மத குகைகோவில்கள் உள்ளன. பட்டடக்கல், கர்நாடகா: ஹிந்து, சமண மதம் சார்ந்த சின்னங்கள் மிச்சம் இருக்கின்றன.
யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களின் பட்டியல்
ஒரிசாவின் கோனார்க் கோவில்: சூரியபகவானுக்கான பிரத்தியேக கோவில் இது. தேர் போன்ற அமைப்பில், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த கோவில். சோழர் கோவில்கள்: ஈசனுக்காக கட்டப்பட்ட, தஞ்சை பெரியகோவிலும், கங்கைகொண்டசோழபுரத்தின் கோவிலும் இணைந்தது தான், இந்த சோழர் கோவில்கள். சாஞ்சியில் உள்ள புத்தமத சின்னங்கள்: புத்தர்கள் வாழ்ந்த அரண்மனைகள், கோவில்கள் கஜுராஹோ: 85 கோவில்களின் கூட்டாக கட்டப்பட்ட இந்த இடத்தில் தற்போது எஞ்சி இருப்பது 22 கோவில்களே அஜந்தா குகைகள்: இதுவும் பௌத்தமதத்தின் வழிபாடு தலமே எல்லோரா குகைகள்: இந்து, பௌத்தம், சமணம் ஆகிய மதங்களின் கூட்டாக இங்கே 34 குடைவரை கோவில்கள் உள்ளன. மகாபலிபுரம்: சூரியனுக்காக, தேர் வடிவில் கோவிலை காட்டியுள்ளார்கள் பல்லவர்கள். ஹம்பி: பிரசித்தி பெற்ற விருபாக்ஷ கோவில் இங்கு உள்ளது.