
வரலாற்று பதிவு: மு.கருணாநிதி முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நாள் இன்று!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அரசியல் காலத்தில் குதித்து, அறிஞர் அண்ணாவின் திமுக கட்சியில், தன்னை இணைத்து கொண்டார்.
சிறுகசிறுக கட்சியில் தன்னுடைய இடத்தை நிலை நாட்டிய கலைஞர் கருணாநிதி, அண்ணாதுரையின் மறைவிற்கு பிறகு, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக, 1969-இல், இதே நாளில் (பிப்., 10) பதவியேற்றார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்பகுதியில் பேனா நினைவு சின்னத்தினை வைப்பது குறித்து தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதனை தொடர்ந்து, மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம், ரூ.80 லட்சம் செலவில் அமையப்பெறவுள்ளது என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
மு.கருணாநிதி பதவியேற்ற நாள்
முதன்முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக மு.கருணாநிதி பதவியேற்ற தினம்#Karunanidhi #FormerCMKarunanidhi #DMK #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/yKz8TgX98u
— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 10, 2023