LOADING...
சர்க்கரைவள்ளி கிழங்கை அவிச்சு சாப்பிடணுமா இல்ல சுட்டு சாப்பிடணுமா? எது நல்லது?
நாம் அதனை சமைக்கும் விதம் அதன் ஊட்டச்சத்து மதிப்பை மாற்றக்கூடும்

சர்க்கரைவள்ளி கிழங்கை அவிச்சு சாப்பிடணுமா இல்ல சுட்டு சாப்பிடணுமா? எது நல்லது?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
12:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் குளிர்காலங்களில் விரும்பி உண்ணப்படும் உணவுகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு முதன்மையானது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், நாம் அதனை சமைக்கும் விதம் அதன் ஊட்டச்சத்து மதிப்பை மாற்றக்கூடும். அவிப்பது (Boiling) அல்லது வறுப்பது (Roasting) - இதில் எது சிறந்தது மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக காணலாம்.

நன்மைகள்

சர்க்கரைவள்ளி கிழங்கின் ஆரோக்கிய நன்மைகள்

சர்க்கரைவள்ளி கிழங்கு செரிமானத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலுக்கு ஆற்றலை அளித்து, குளிர்கால நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து ஒரு இயற்கை 'Prebiotic' போல செயல்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சரியான முறையில் சமைப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தவிர்க்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கின் தோலில் அதிகப்படியான நார்ச்சத்தும் சத்துக்களும் உள்ளன. எனவே, சமைப்பதற்கு முன் நன்றாகக் கழுவிவிட்டு தோலுடன் உண்பது கூடுதல் ஆரோக்கியத்தைத் தரும். ஆறிய, வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவும்.

சமைக்கும் முறை

அவிப்பதா? சுடுவதா? -எது சிறந்தது?

அவிப்பது: ஊட்டச்சத்து நிபுணர்கள் இதையே பரிந்துரைக்கின்றனர். அவிக்கும்போது கிழங்கில் உள்ள சில சர்க்கரைகள் தண்ணீரில் கரைவதால் அதன் 'கிளைசெமிக் இன்டெக்ஸ்' (Glycemic Index) குறைகிறது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். கிழங்கை அவித்த பிறகு சிறிது நேரம் ஆறவைத்துச் சாப்பிடுவது நல்லது. இது 'Resistant Starch எனும் நார்ப்பொருளை உருவாக்கி, செரிமானத்தை மெதுவாக்கி நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். சுடுவது/வறுப்பது: கிழங்கு அதிக இனிப்பாகவும் சுவையாகவும் மாறும். ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தி வறுக்கும்போது, அது இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகளை வழங்குகிறது.

Advertisement