NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பொலிவான சருமத்திற்கு இந்த ஃபேஷியல்களை செய்து பாருங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொலிவான சருமத்திற்கு இந்த ஃபேஷியல்களை செய்து பாருங்கள்
    பொலிவான சருமத்திற்கு இந்த ஃபேஷியல்களை செய்து பாருங்கள்

    பொலிவான சருமத்திற்கு இந்த ஃபேஷியல்களை செய்து பாருங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 13, 2023
    04:46 pm

    செய்தி முன்னோட்டம்

    பண்டிகைக் காலம் என்றாலே மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதற்கான நேரம்.

    மேலும், இந்த நாட்களில் நீங்கள், உங்களுடைய பெஸ்ட்-ஆன லுக்-ஐ வெளிக்காட்ட சரியான சந்தர்ப்பமாகும்.

    இந்த சிறப்பு விழாக்களின் போது, உங்கள் சருமம் பிரகாசமாக இருப்பதை உறுதிப்படுத்த, ஸ்கின் ஃபேஷியல் ஒரு சிறந்த தீர்வு.

    ஆனால், எந்த ஃபேஷியலை தேர்வு செய்வது என யோசனையா? நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

    card 2

    ஹைட்ரேட்டிங் ஃபேஷியல் 

    வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஹைட்ரேட்டிங் ஃபேஷியல் சரியான தேர்வு என்கிறார்கள் நிபுணர்கள்.

    இது ஈரப்பதமூட்டும் சீரம், ஈரப்பதமூட்டும் ஃபேஸ் மாஸ்க் மற்றும் உங்கள் சருமத்தின் ஈரப்பத சமநிலையை மீட்டெடுக்க சிறப்பு நுட்பங்கள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகிறது.

    "இந்த ஃபேஷியல் இழந்த நீரேற்றத்தை நிரப்புவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தையும் அளிக்கிறது. பண்டிகைகளின் போது உங்கள் சருமம் சிறந்த பொலிவுடன் இருப்பதை உறுதி செய்கிறது," என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    card 3

    பிரைடனிங் ஃபேஷியல்

    பொலிவற்ற மற்றும் சீரற்ற தோல் அனைவருக்கும் ஒரு பொதுவான கவலை.

    முகத்தை பிரகாசமாக்குவது என்பது பொதுவாக இறந்த சரும செல்களை நீக்கி, மென்மையான மசாஜ் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த பொருட்கள் கொண்ட சீரம்களைப் பயன்படுத்துகிறது.

    இதனால் உங்கள் சருமம், இயற்கையான பளபளப்பை பெறுகிறது

    card 4

    ஆன்டி- ஏஜிங் ஃபேஷியல்

    பண்டிகைக் காலத்தில் இளமைத் தோற்றத்தைப் வெளிக்காட்ட வேண்டும் என விரும்பாதவர்களே இருக்க முடியாது. அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது, இந்த Anti-Aging ஃபேஷியல்.

    இந்த சிகிச்சையில் பெரும்பாலும் மைக்ரோடெர்மபிரேஷன், கொலாஜனை அதிகரிக்கும் சீரம்களின் பயன்பாடு மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஃபேஸ்மாஸ்க் ஆகியவை அடங்கும்.

    இது வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் உங்கள் சருமத்தை இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.

    card 5

    கோல்ட் அல்லது டைமண்ட் பேஷியல்

    இந்த ஃபேஷியல்களில், தங்கம் அல்லது வைரத்தின் துகள்கள் போன்ற செழுமையான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அவை சருமத்தை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பிரகாசத்தை அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றவை.

    இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் திருமணங்கள் போன்ற பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

    பெயருக்கேற்றார் போல, இதன் விளையும் சிறிது அதிகமாகவே இருக்கும்.

    ஆனால், இந்த ஃபேஷியல் செய்வதன் மூலம், உங்கள் சருமம், பளபளப்பாகவும், பலரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் மாறும் என்பதில் ஐயமில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சரும பராமரிப்பு
    சரும பராமரிப்பு குறிப்புகள்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    சரும பராமரிப்பு

    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியம்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது உடல் ஆரோக்கியம்
    சரும பராமரிப்பு குறிப்புக்கள்: பொலிவான சருமம் பெற, வாழ்க்கை முறையை மாற்றுங்கள் உடல் ஆரோக்கியம்
    குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க எளிய வழிகள் சரும பராமரிப்பு குறிப்புகள்

    சரும பராமரிப்பு குறிப்புகள்

    குளிர் காலத்தில், வறட்சியாகும் சருமத்தை பாதுகாக்க எளிமையான வீட்டு வைத்தியம்! சரும பராமரிப்பு
    டால்கம் பவுடரை இதற்கும் பயன்படுத்தலாம்! வல்லுநர்கள் கூறும் சில பயன்பாடுகள் அழகு குறிப்புகள்
    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    மேக்அப் பிரியர்களே, நீங்கள் செய்யக்கூடிய சில தவறுகள், உங்கள் சருமத்தை பாதிக்கலாம்! சரும பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025