உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் 'அன்னாச்சிப் பழ டயட்'
நவீன கால இயந்திர உலகில் உடல் பருமன் என்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய பிரச்சனையாவே பார்க்கப்படுகிறது. எடை குறைக்க வேண்டுமானால், உடலில் உள்ள கலோரிகள் குறைய வேண்டும். கலோரிகளை குறைப்பதற்காக சரியாக சாப்பிடாமல் பலரும் இருப்பார்கள். இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் பல பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் எடையை இயற்கையான வழியில் குறைக்க பின்பற்றும் வழிமுறைகளில் ஒன்று தான் 'அன்னாசி பழ டயட்'. 1970-களில் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்க மக்கள் பயன்படுத்திய ஒரு வழிமுறையாகும். அன்னாசி பழ டயட் என்றால் என்ன, என்ன செய்ய வேண்டும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன போன்ற கேள்விக்களுக்கான பதில்களை தெரிந்து கொள்ள தொடந்து படியுங்கள்.
அன்னாசிப் பழ டயட் என்றால் என்ன? இது நம் உடலுக்கு நல்லதா?
அன்னாசி பழ டயட் என்பது 2-7 நாட்களுக்கு அன்னாசியை மட்டும் உணவாக சாப்பிடுவதாகும். அன்னாசிப்பழத்தைத் தவிர வேறெந்த உணவையும் சாப்பிடக் கூடாது. சில நாட்களில் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது உதவலாம். அன்னாசியில் குறைவான கலோரிகள் உள்ளது. 90 சதவீதம் நீர்ச்சத்தினை கொண்டுள்ளது. இதிலுள்ள இரும்பு சத்து ரத்த சிவணுக்களை உற்பத்தி செய்து உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது. இது உடலை சுறுசுறுப்பாகி கொழுப்பை கரைக்க உதவுகிறது. தசைநார்களை வலுப்படுத்துகிறது. மற்ற டயட்டை போலவே, இதுவும் அதன் சொந்த நன்மை தீமைகளை கொண்டுள்ளது. இந்த டயட் தற்காலிகமானது. டயட்டை விட்டுவிட்டால், உங்களுக்கு மீண்டும் எடை கூடலாம். மேலும் நீண்ட காலத்திற்கு இந்த டயட்டை பின்பற்றினால், குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.