LOADING...
தர்பூசணி பழத்தை யார் யார் எல்லாம் சாப்பிடக்கூடாது?
தர்பூசணி பழம்

தர்பூசணி பழத்தை யார் யார் எல்லாம் சாப்பிடக்கூடாது?

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
09:43 am

செய்தி முன்னோட்டம்

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் அனைவரும் தர்பூசணி பழத்தை வாங்கி சாப்பிட மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். பழங்களில் நல்ல பழம் கெட்ட பழம் என எதுவும் கிடையாது. ஆனால் நம்முடைய உடல்நிலையைப் பொறுத்து அது மாறலாம். தர்பூசணி உடலுக்கு மிகவும் நல்லது தான் என்றாலும், உடலில் குறிப்பிட்ட பிரச்சினை இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது என்னென்ன பிரச்சினை என்பதைப் பார்க்கலாம். தர்பூசணியில் தண்ணீர்ச்சத்து அதிகம் என்றாலும், சர்க்கரை அளவும் அதிகம். எனவே, நீரிழிவு நோயாளிகள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. பழத்தை சாப்பிட்ட பின்பு உடலில் சர்க்கரை அளவு வேகமாக கூட வாய்ப்புகள் இருக்கிறது.

தர்பூசணி

யார் யார் சாப்பிடக்கூடாது?

சிறுநீரக நோய் உள்ளவர்கள் தர்பூசணியைத் தவிர்க்கலாம். இதில் பொட்டாசியம் அதிகம், எனவே சீறுநீரக பிரச்சினை இருப்பவர்களால் இதனை வடிகட்ட முடியாது. இது உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிக்கச் செய்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். தர்பூசணியில் ஃப்ரக்டோஸும் அதிகம். எனவே கல்லீரல் பிரச்சினைகள் இருப்பவர்களும் இந்தப் பழத்தைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு இந்தப் பழம் ஜீரணிக்கக் கடினமானதாக இருக்கும். இதனால் கல்லீரல் பிரச்சினைகளும் மோசமாகலாம். அமிலத்தன்மை, IBS மற்றும் வாயுவீக்கம் போன்ற செரிமானப் பிரச்சினைகள் கொண்டவர்கள் தர்பூசணியைத் தவிர்க்கலாம். சென்ஸிட்டிவ்வான செரிமான மண்டலம் கொண்டவர்களுக்கும் தர்பூசணியை ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

Advertisement