
மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?
செய்தி முன்னோட்டம்
நம் அனைவரின் வீட்டிலும் தயிர் என்பது ஒரு அத்தியாவசிய உணவாகும். ஆனால் பெரும்பாலும் தயிர் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் பொருள் என்பதால் அதனை குளிர்க் காலங்களும், மழைக் காலங்களும் சளி, இருமல் வரும் என அதனை தவிர்ப்பார்கள்.
உண்மையில் மழைக்காலங்களின் தயிர் சாப்பிடுவதினால் நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று பார்ப்போம் வாருங்கள்.
பாலில் இருந்து திரித்து எடுக்கப்படும் தயிரானது உண்மையில் ஆகச்சிறந்த உணவாகும். நம் உடலுக்கு 'புரோ-பயாடிக்' எனும் நன்மையை தர கூடிய பாக்டீரியக்கள் தயிரில் அதிகம் உள்ளது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ரத்ததிலுள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.
தயிர்
தயிர் குளிர்ச்சியடையும் தன்மையால் குளிர் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டுமா?
உண்மையில் மழையோ அல்லது குளிர்க் காலங்களிலோ மட்டுமல்ல தயிர் அனைத்து பருவக் காலத்திற்கும் ஏற்றது.
தயிர் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது மட்டுமல்லாமல் அழற்சியையும் (Inflammation) தடுக்கிறது. வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகிறது.
அதோடு எடையை குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. குழந்தைகள் கூட தயிர் சாப்பிட வைக்க வேண்டும்,
வேண்டுமெனில், அவர்களுக்கு தயிராய் சுவையாக்கவும் ஊட்டச்சத்து நிறைந்ததாக்கவும், அதனுடன் பழங்கள் மற்றும் காய்கறி வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம்.
எனவே, வருடத்தின் எந்த பருவத்தில் இருந்தாலும் தயக்கமின்றி தினமும் தயிர் சாப்பிடுங்கள்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் புரோபயாடிக் உங்களுக்கு பிரச்சனையைக் கொடுக்காது.