Loading...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்காதீங்க! மூளை மற்றும் மனநலனைப் பாதிக்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூளை மற்றும் மனநலனைப் பாதிக்கும் அபாயம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்காதீங்க! மூளை மற்றும் மனநலனைப் பாதிக்கும் அபாயம்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 20, 2026
07:25 pm

செய்தி முன்னோட்டம்

ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக்டாக் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் போன்ற குறுகிய வீடியோக்களை மணிக்கணக்கில் தொடர்ந்து பார்ப்பது, மனித மூளையின் சிந்திக்கும் திறனை கணிசமாகக் குறைத்து தீவிர மன அழுத்தத்தை உருவாக்கும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. "எப்போதும் போனைப் பார்த்துக் கொண்டே இருக்காதே" என பெற்றோர்கள் கூறிய அறிவுரை முற்றிலும் உண்மை என்பதைச் சீனாவின் முன்னணி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வு அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது.

மூளை பாதிப்பு

மூளையின் முதன்மையான பகுதிகளை செயலிழக்க செய்யும் குறுகிய வீடியோக்கள்

சீனாவின் முன்னணி மூளையியல் மற்றும் உளவியல் துறை ஆய்வாளர்கள் 56 இளைஞர்களிடம் நடத்திய ஆய்வில், குறுகிய வீடியோக்களைத் தொடர்ந்து பார்க்கும் போது மூளையின் dACC (dorsal anterior cingulate cortex) மற்றும் dlPFC (dorsolateral prefrontal cortex) ஆகிய இரண்டு முக்கியமான பகுதிகள் தற்காலிகமாக செயலிழப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முடிவெடுத்தல், கவனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் சிந்தனைத் திறனை கட்டுப்படுத்தும் இந்த இரண்டு பகுதிகள் முடக்கப்படுவதால் மனித மூளையின் இயல்பான அறிவாற்றல் செயல்பாடு பெருமளவில் குறைகிறது.

அல்காரிதம்

அல்காரிதம் மற்றும் லைக் பட்டன்களின் பின்னால் உள்ள ஆபத்து

செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் மூலம் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுக்கப்படும் வீடியோக்களை முழுமையாக பார்த்து லைக் செய்யும் போது, மூளையின் முன் பகுதி கண்காணிப்பு அமைப்பு மேலும் முடங்குகிறது.

அதேபோலப் பிடிக்காத வீடியோக்களைப் புறக்கணிக்கும் போதும் மூளையின் மனக்கட்டுப்பாட்டுப் பகுதி தொடர்ந்து ஒடுக்கப்படுகிறது.

வழக்கமாக சமூக வலைத்தளங்களை அடிக்கடி சோதிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, சமூக வெகுமதிகளை எதிர்பார்க்கும் மூளையின் நரம்பு உணர்திறன் பெருமளவில் குறைந்து விடுவதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ADVERTISEMENT

டூம் ஸ்க்ரோலிங்

டூம் ஸ்க்ரோலிங் மற்றும் மன அழுத்த சுழல்

மொபைல் திரையில் எல்லையற்ற வீடியோக்களைத் தொடர்ந்து டூம் ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் கிடைக்கும் உடனடி மகிழ்ச்சி, மனிதர்களை சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக்குகிறது.

இதனால் ஏற்படும் தொடர் கவனச்சிதறல், படிப்படியாக மனிதர்களின் கவனம் செலுத்தும் திறனைக் குறைத்துத் தீராத மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்குள் தள்ளி விடுகிறது.

டிவி பார்ப்பதை விட ஸ்மார்ட்போன்களில் குறுகிய வீடியோக்களைப் பார்ப்பதே மூளை நலனுக்குப் பெருமளவில் ஆபத்தானது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ADVERTISEMENT

வழிகாட்டுதல்

மூளை நலனைப் பாதுகாக்க ஆய்வாளர்கள் தரும் வழிகாட்டுதல்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபட, மொபைல் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தேவையில்லாத நேரங்களில் செல்போனை ஏரோபிளேன் மோட் செய்து வைத்துவிட்டு, புத்தக வாசிப்பு மற்றும் உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது மூளையின் புத்துணர்ச்சியை மீட்டெடுக்கும்.

பெற்றோர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது டிஜிட்டல் உலகில் நம் மனநலனையும் மூளை நன்மையையும் பாதுகாக்க சிறந்த வழியாகும்.

ADVERTISEMENT