பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி?
பெற்றோர்களே, உங்கள் பிள்ளை, அவர்களின் பாலினம் மற்றும் பாலுணர்வை ஆராய்வதால் அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்று யோசிக்கிறீர்களா? அதை எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? குழந்தைகள் தங்கள் பாலினத்தை உணர்ந்து, கண்டுபிடிப்பதில், பெற்றோர்களின் ஆதரவும், அன்பும் மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைக்கு, நீங்கள் எவ்வாறு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் என தெரிந்துகொள்ள, மேற்கொண்டு படிக்கவும்: வீட்டிற்குள் திறந்த சூழலை உருவாக்குங்கள்: குழந்தைகளை, அவர்களின் உண்மையான இயல்புடன் இருக்க அனுமதிக்கவும். அதேபோல, அவர்கள், உங்களிடம் எல்லா சந்தேகங்களையும், கேள்விகளையும் வெளிப்படையாக கேட்கும் உரிமையையும், சூழலையும் அவர்களுக்கு வழங்குங்கள். குழந்தையை நம்புங்கள்: நீங்கள் ஆதரவாக இருக்க விரும்பினால், நீங்கள் அவர்களை நம்புகிறீர்கள் என்பதை உங்கள் குழந்தை அறிந்து கொள்ள வேண்டும்.
பாலினம் என்பது இயற்கை, அது ஒரு தேர்வு அல்ல
அவர்களின் சொல்லின் மீதும், செயலின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். பாலினம் என்பது தேர்வு அல்ல: பாலின மாற்று சிகிச்சைகளின் எதிர்வினையை, குழந்தைகளுக்கு உணர்த்துவது அவசியம். அதை செய்வதனால், ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் எனவும் உணர்த்துங்கள். முன்முடிவுகள் இன்றி உரையாடுங்கள்: உங்கள் குழந்தைகளிடம், பாலுணர்வு பற்றிய விவரங்களை தெளிவாக பேசுங்கள். அப்போது, உங்கள் சொந்த கருத்துகளை அவர்கள் மீது திணிக்காத வண்ணம் உரையாடுங்கள். சமூக வரையறைக்குள் அவர்களை அடைக்காதீர்கள். LGBTQ ஆதரவு குழுக்களுடன் இணைக்கவும்: உங்கள் நகரத்தில் இயங்கும் LGBTQ ஆதரவு குழுவினரை அணுகலாம். இதன் மூலம் உங்கள் பிள்ளைக்கு தெளிவான, சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவ முடியும்.