Loading...
ஃப்ரிட்ஜில் சூடான உணவை அப்படியே வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? பலரும் செய்யும் பெரிய தவறு
ஃப்ரிட்ஜில் சூடான உணவை அப்படியே வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

ஃப்ரிட்ஜில் சூடான உணவை அப்படியே வைத்தால் என்ன ஆகும் தெரியுமா? பலரும் செய்யும் பெரிய தவறு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2026
07:42 pm

செய்தி முன்னோட்டம்

சமைத்து முடித்தவுடன் மீதமிருக்கும் உணவுகள் கெட்டுப்போகக் கூடாது என்பதற்காக, அவை சூடாக இருக்கும்போதே அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. உணவைப் பாதுகாப்பதற்காக செய்யப்படும் இந்தச் செயல், உண்மையில் உணவின் தரத்தைக் கெடுப்பதுடன் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜின் ஆயுளையும் பெருமளவில் குறைக்கும் ஒரு ஆபத்தான அலட்சியமாகும். இதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அழுத்தம்

ஃப்ரிட்ஜின் கம்ப்ரஸருக்கு ஏற்படும் அழுத்தம்

சூடான உணவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது, ஃப்ரிட்ஜின் உட்புற வெப்பநிலை உடனடியாக அதிகரிக்கிறது.

குளிர்சாதன பெட்டி தன் உட்புறத்தை மீண்டும் குளிர்ந்த நிலைக்குக் கொண்டு வர, அதன் கம்ப்ரஸர் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

இதனால் அதிகப்படியான மின்சாரம் விரயமாவதோடு, கம்ப்ரஸர் விரைவிலேயே பழுதாகி ஃப்ரிட்ஜின் ஆயுட்காலமும் கணிசமாகக் குறைகிறது.

தொற்று ஆபத்து

அருகில் இருக்கும் உணவுகளில் பாக்டீரியா தொற்று ஆபத்து

சூடான பாத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆவி மற்றும் வெப்பம், ஃப்ரிட்ஜின் உட்புற வெப்பநிலையைத் திடீரென உயர்த்துகிறது.

இதன் காரணமாக, ஃப்ரிட்ஜில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள பால், காய்கறிகள் போன்ற பிற உணவுகள் டேஞ்சர் சோன் (Danger Zone - 5°C முதல் 60°C வரை) எனப்படும் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகும் வெப்பநிலையை அடைகின்றன.

இது பிற உணவுகளிலும் கிருமித்தொற்றை உண்டாக்கி உணவு நஞ்சாக வழிவகுக்கும்.

ADVERTISEMENT

சரியான முறை

உணவை சரியாகப் பாதுகாக்கும் முறை

சமைத்த உணவை அறை வெப்பநிலைக்கு நன்கு ஆறவைத்த பின்னரே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

ஆனால், உணவை வெளியே 2 மணி நேரத்திற்கு மேல் ஆற வைக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

உணவைக் காற்றுப்புகாத பாத்திரங்களில் அடைத்து வைப்பதன் மூலம் ஃப்ரிட்ஜின் ஆயுளையும் உங்கள் ஆரோக்கியத்தையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க முடியும்.

ADVERTISEMENT