அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சியுங்கள்
Acid Reflex என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெஞ்சு எரிச்சல், உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மை அதிகரிக்கும் போது ஏற்படும். அதனால், உங்கள் உணவுக்குழாய் எரியும் உணர்வு, மார்பின் மையத்தில் வலி மற்றும் தொண்டையில் தொடர்ந்து கரகரப்பு போன்ற உணர்வுகளை தரும். அடிக்கடி அப்படி ஏற்படும்போது, உங்கள் தினசரி வேலைகள் பாதிக்கும். குறிப்பாக அதை தொடர்ந்து உணவு உண்பது, கடினமாகும். இந்த அசௌகரியமான சூழலை சமாளிக்க, சில இயற்கையான வீட்டு வைத்தியங்களை நீங்கள் முயற்சி செய்யலாம்.ஆப்பிள் சிடார் வினிகர்: ஆப்பிள் சிடார் வினிகரில் நல்ல அளவு புரதம், பெக்டின் மற்றும் என்சைம்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வயிற்றில், அமிலத்தின் அளவை குறைக்கிறது. அமில உற்பத்தியைக்குறைக்க, உணவுக்கு முன் அல்லது பின் இதை குடிக்கலாம்.
நெஞ்சு எரிச்சலை போக்க சில வீடு வைத்தியங்கள்
மோர்: மோர், நெஞ்சு எரிச்சலுக்கு ஒரு சுவையான மருந்து. இதில் உள்ள லாக்டிக் அமிலம், வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை இயல்பாக்குவதால், குளிர்ச்சியான விளைவை அளிக்கிறது. வெல்லம்: வெல்லம், நெஞ்சில் எரியும் உணர்வுகளை நீக்கும் ஒரு 'இனிப்பு' மருந்து. ஏனெனில் இதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. முந்தையது உங்கள் வயிற்றில் அமிலத்தின் pH அளவை பராமரிக்கிறது, பிந்தையது உங்கள் செரிமான அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இவை இரண்டும் அமில வீச்சைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. சீரகம்:மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகம், உணவுக்குப் பிறகு ஏற்படும் அமில வீச்சை தணிக்க உதவும். சீரகத்தில் உண்பதால், காஸ்ட்ரோ-பாதுகாப்பு, குமட்டல், வயிற்று பிடிப்புகள், நெஞ்செரிச்சல், ஏப்பம், வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்டவகளைத் தடுக்கும்.