NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அரசு சேமிப்புத் திட்டங்களில் புதிய மாற்றங்களை அமல்படுத்திய பொருளாதார விவகாரத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரசு சேமிப்புத் திட்டங்களில் புதிய மாற்றங்களை அமல்படுத்திய பொருளாதார விவகாரத்துறை
    அரசு சேமிப்புத் திட்டங்களில் புதிய மாற்றங்களை அமல்படுத்திய பொருளாதார விவகாரத்துறை

    அரசு சேமிப்புத் திட்டங்களில் புதிய மாற்றங்களை அமல்படுத்திய பொருளாதார விவகாரத்துறை

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 21, 2023
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் முதியோர் சேமிப்புத் திட்டம் (SCSS) உள்ளிட்ட சேமிப்புத் திட்டங்களின் விதிமுறைகளில் சில பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

    இந்த சேமிப்புத் திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையிலான மாற்றங்களையே கொண்டு வந்திருப்பதாக, புதிய மாற்றங்கள் குறித்து தெரிவித்திருக்கிறது மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொருளாதார விவகாரத் துறை.

    சரி, மேற்கூறிய சேமிப்புத் திட்டங்களின் விதிமுறைகளில் என்னென்ன வகையிலான புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன? பார்க்கலாம்.

    சேமிப்புத் திட்டம்

    முதிர்வு காலத்திற்கு முன்பே PPF கணக்கை முடித்துக் கொள்வது: 

    பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்தை முதிர்வடையும் காலத்திற்கு முன்பே பெற புதிய வதிமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

    அதன்படி, முதலீடு செய்த நபர் அல்லது அவரது நெருங்கிய உறவினரின் உடல்நலன், மேற்படிப்பிற்கான செலவுகள் மற்றும் வேறு நாட்டுக்கு குடிபெயர்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிட்டு பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்பே பெற்றுக் கொள்ளலாம்.

    ஆனால் இதற்கு, மேற்கூறிய காரணங்களுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதோடு, முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடித்துக் கொள்வதற்கான அபராத விதிமுறைகளில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா

    குறிப்பிட்ட கால வைப்பு நிதியின் வட்டி விகித விதிமுறையில் மாற்றம்: 

    மூன்று வருடம், ஐந்து வருடம் என குறிப்பிட்ட அளவு காலத்திற்கு முதலீடு செய்யப்படும் கால வைப்பு நிதியில், முதிர்வடையும் காலத்திற்கு முன்பே பணத்தைப் பெற வேண்டுமானால், அதற்கு குறைந்த கால வைப்பு நிதியில் கொடுக்கப்படும் வட்டி வகிதத்துடனேயே கொடுக்கப்பட்டு வந்தது.

    ஆனால், இனி அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி வகிதிம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதியோர் சேமிப்புத் திட்டத்தில் சேர ஓய்வூதியப் பலன்களைப் பெற்றதிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் சேர வேண்டும் என்ற கால அளவு தற்போது மூன்று மாத காலமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது முதியோர் புதிய சேமிப்புக் கணக்கு தொடங்குவதை எளிமையாக்குவதற்காக செய்யப்பட்ட மாற்றமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சேமிப்பு திட்டங்கள்
    சேமிப்பு கணக்கு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  வங்க கடல்
    சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மரணம்: 3 கோடி மக்களின் 25,000 கோடி ரூபாயின் நிலைமை என்ன? உச்ச நீதிமன்றம்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் உத்தரகாண்ட்
    உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பிடித்த பெண்கள் - ஆய்வின் தகவல் மது

    சேமிப்பு திட்டங்கள்

    சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் சேமிப்பு கணக்கு
    அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே சேமிப்பு கணக்கு
    5 ஆண்டுகளில் 16லட்சம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்! சேமிப்பு கணக்கு
    ஆன்லைன் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி - இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க! சேமிப்பு கணக்கு

    சேமிப்பு கணக்கு

    30 களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 6 பணம் சம்மந்தப்பட்ட தவறுகள் சேமிப்பு டிப்ஸ்
    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    சுகன்யா சம்ரிதி யோஜனா 2023 திட்டம் - ரூ.250 முதலீட்டில் 65 லட்சம் பலன் சேமிப்பு திட்டங்கள்
    10 லட்சம் ரிட்டன் தரும் எல்.ஐ.சி. சூப்பரான பாலிசி திட்டம்! சேமிப்பு திட்டங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025