Page Loader
இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன்
எந்த மொழியில் தேடினாலும் அனிமேஷன் வரும்!

இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2024
12:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்தாண்டின் முதல், முழு சூரிய கிரகணம் இன்று நடைபெறவுள்ளது. வானிலையியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளனர். இந்த வகையில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகிளும் இணைந்துள்ளது. கூகுளின் பிரௌசர் விண்டோவில் இந்த நிகழ்வை ஒட்டி அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அனிமேஷனில், முழு சூரிய கிரகணத்தைப் பற்றி தேடும் கூகுள் பயனர்களுக்கு அந்த நிகழ்வை சித்தரிக்கும் கிராஃபிக் அனிமேஷன் வெளிப்படும். அனிமேஷனைப் பார்க்க, google.com இல் உள்ள தேடுபொறியில் பின்வருவனவற்றைத் தட்டச்சு செய்யலாம்: ஏப்ரல் 8, கிரகணம், கிரகணம் 2024, சூரிய கிரகணம், சூரிய கிரகணம் 2024, முழு சூரிய கிரகணம், சூரிய கிரகணம் என்றால் என்ன? இந்த கேள்விகளை எந்த மொழியில் தேடினாலும் அனிமேஷன் வரும்!

embed

சூரிய கிரகணத்திற்கு கூகுளின் கூகிள் டூடுல்

Did you know what happens when you write "Solar eclipse" on Google? See below 👇🏻😁#SolarEclipse #SolarEclipse2024 #Google #April8 #كسوف_الشمس pic.twitter.com/kJS98Wj7nh— PASTUZO.gaming (@Pastuzogaming) April 7, 2024