இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
அனைத்துக் காலங்களிலும் மக்களின் மிகவும் நம்பகமான முதலீட்டுக் கருவியாக இருப்பது வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் தான். ஒரு முதலீட்டில் கூடுதலாகக் கிடைக்கும் லாபத்தைக் கடந்து, முதலீட்டிற்கான பாதுகாப்பையும் இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஓரளவு லாபத்துடன், முதலீட்டிற்கான பாதுகாப்பையும் அளிப்பதனால் நிறைய மக்கள் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவில் நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை? ஆக்ஸிஸ் வங்கி: 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்திற்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 3.5% முதல் 7.3% வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 8.05% வரையிலும் வட்டி வழங்குகிறது ஆக்ஸிஸ் வங்கி.
கனரா வங்கி:
7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்திற்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 4% முதல் 7.25% வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வரையிலும் வட்டியும் வழங்கப்படுகிறது. SBI வங்கி: மேற்கூறிய வகையில் பொது வாடிக்கையாளர்களுக்கு 3% முதல் 7.1% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு தங்கள் வைப்புநிதியின் மீது 50 அடிப்படைப் புள்ளிகளையும் கூடுதலாக வழங்குகிறது. HDFC வங்கி: பொது மக்களுக்கு 3% முதல் 7.25% வரையிலான வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.75% வரையிலான வட்டியும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி: பொது மக்களுக்கு 3% முதல் 7.10% வரையிலான வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7.60% வரையிலான வட்டியும் வழங்கப்படுகிறது.