இளம் வயதினரை அதிகமாக பாதிக்கும் மாரடைப்பு பற்றி நிபுணர் கருத்து
செய்தி முன்னோட்டம்
முன்பெல்லாம் வயதானவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படும் என்ற காலம் மாறி, தற்போது, இளம் வயதினர் பலர் மாரடைப்பால் காலமாவதை பற்றி பல செய்திகள் வருகின்றன.
அப்படி இளம் வயதினரை பாதிக்கும் மாரடைப்பு பற்றியும், அதை தடுப்பதை பற்றியும் உணவியல் மற்றும் உடற்பயிற்சி நிபுணரான ஆகாஷ் பன்சால் விளக்குகிறார்.
செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளை, உதாரணமாக, ஸ்டெராய்டு உட்கொள்வது, இதற்கு முக்கிய காரணம் என்று பன்சால் கூறுகிறார்.
"பல இளைஞர்கள், தங்கள் போட்டித்திறனை மேம்படுத்தவும், உடல் எடையை குறைக்க, அல்லது உடல் தோற்றத்தை மேம்படுத்த இந்த மருந்துகளை பயன்படுத்துவதால், மன அழுத்தம் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது " என்று தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியம்
உடற்பயிற்சியில் கவனம் தேவை
குடும்பத்தில் இதய நோய் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பவர்கள், அதிகமாக எடைகளை தூக்கி உடற்பயிற்சிகளை செய்வோரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான மேற்பார்வை இல்லாமல், தவறான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க முடியாமல் போகலாம்.
மேலும், புகைபிடித்தல், மன அழுத்தம், ஒழுக்கமில்லாத வாழ்க்கை முறை, தூக்கமின்மை, உணவு பழக்கம் போன்ற காரணிகளும், இளைஞர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும், என்கிறார் பன்சால்.
"உங்கள் ஃபிட்னஸ் லெவல் மற்றும் வயதுக்கு ஏற்ப உடற்பயிற்சி முறையை தேர்வு செய்யுங்கள்" என்று கூறுகிறார்.
"உங்களுக்கு நெஞ்சு வலி, தலைச்சுற்றல் அல்லது தாடை வலியுடன் வியர்வை ஏற்பட்டால், உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை அணுகவும். அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்" என்று எச்சரித்துள்ளார்.