கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கான முக்கியமான அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை செயல்படுகிறது . 2015 ஆம் ஆண்டில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையில் வண்ண வடிவத்தை அறிமுகப்படுத்தியது. உங்கள் பழைய கருப்பு மற்றும் வெள்ளை வாக்காளர் அட்டையை, புதிய வண்ணத்துடன் மாற்ற விரும்பினால், இதோ உங்களுக்கு உதவுவதற்கு ஒரு செயல்முறை வழிகாட்டி:
தேவையான ஆவணங்கள்
கலர் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற, உங்களுக்கு சில அத்தியாவசிய ஆவணங்கள் தேவைப்படும். உங்கள் முகவரிக்கான சான்று, உங்கள் வயதை உறுதிப்படுத்தும் ஆவணம் (நீங்கள் 18 முதல் 21 வயதிற்குள் இருந்தால் மட்டுமே அவசியம்) மற்றும் உங்களின் சமீபத்திய புகைப்படம் ஆகியவை இதில் அடங்கும். ஆவணங்களுடன், உங்கள் நகரம் அல்லது மாவட்டத்தின் பதிவு மையத்தில், ரூ. 30 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை
1. https://voters.eci.gov.in/ இணையதளத்தில், வாக்காளர் போர்ட்டல் என்ற சேவையை தேர்வு செய்யவும். 2. முகப்புப் பக்கத்தில், "பொது வாக்காளர்களுக்கான புதிய பதிவு" பெட்டியின் கீழ், "படிவம் 6 ஐ நிரப்பவும்" என்பதைக் கிளிக் செய்து, திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். 3. நீங்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் NRI ஆக இருந்தால், நீங்கள் படிவம் 6A-ஐ நிரப்பலாம். 4. படிவம் 6 ஐ பூர்த்தி செய்து, உங்கள் புகைப்படம் மற்றும் பிற விவரங்களை பதிவேற்றி, அதைச் சமர்ப்பிக்கவும்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்கும் செயல்முறை
1. உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை அலுவலகத்தைக் கண்டறியவும். 2. தேவையான அனைத்து ஆவணங்களுடன் அங்கே சென்று, உங்கள் தேவையை, அங்கிருக்கும் அலுவரிடம் தெரிவித்து, விண்ணப்பத்தை பெறவும். 3. சரியான தகவலுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்யவும். 4. தேவையான அனைத்து ஆவணங்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஒப்படைக்கவும். 5. இந்திய தேர்தல் ஆணையம் அனைத்தையும் சரிபார்த்து அங்கீகரித்தவுடன், அவர்கள் உங்களுக்கு வண்ணத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்கள்.
அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள
உங்கள் வண்ண வாக்காளர் அடையாள விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ள, பின்வரும் முறையை பின்பற்றவும்: 1. https://voters.eci.gov.in/ இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் போர்ட்டல் சேவையைத் திறந்து, "சேவைகள்" tab -இன் கீழ் "விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும். 2. விண்ணப்பப் படிவ எண் மற்றும் தேவையான விவரங்களை உள்ளிட்டு, 'தேடு' என்பதைக் கிளிக் செய்யவும். 3. சரிபார்க்கப்பட்டதும், வாக்காளர் அட்டை எண் மற்றும் இ-சேவை மைய எண் காட்டப்படும்.