குளிர்காலத்தில் உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய நான்கு முக்கிய உலர் பழங்கள்
குளிர்காலம் தொடங்கிவிட்டது. வெதுவெதுப்பான போர்வைகள் மற்றும் ஸ்வட்டர்களுடன், உங்கள் உணவில் சில உலர் பழங்களை சேர்க்க வேண்டிய நேரம் இது. சத்துக்களால் நிறைந்துள்ள இந்த உலர் பழங்கள், குளிர்காலத்தில் நீங்கள் விரும்பும் இனிப்பு சுவையை உங்களுக்கு தராமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக உங்கள் உடம்பை வெதுவெதுப்பாகவும், குளிர்கால நோய்கள் இடமிருந்தும் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இப்பருவத்தில் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நண்பனாக இருக்கும், நான்கு அத்தியாவசிய உலர் பழங்களின் சிறப்பான நன்மைகளை ஆராயலாம்.
பாதாம் பருப்புகள்
தனது ஆக்ஸிஜனேற்றி பண்புகளுக்காகவும், விட்டமின் ஈ சத்துக்காகவும் அறியப்படும் பாதாம் பருப்புகள், குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பராமரிப்பதில் பெரும்பங்காற்றுகிறது. அவற்றின் ஊட்டமளிக்கும் பண்புகள், சருமம் வறண்டு போவதை எதிர்த்து போராடுகின்றன. இதை உட்கொள்வது உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கும். மேலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாதாம் பருப்புகள், குளிர்காலத்தில் ஏற்படும் வழக்கமான நோய் தொற்றுகளில் இருந்து உங்களை காப்பாற்ற உதவும் என நிபுணர்கள் கூறுகின்றார்.
வாதுமைக் கொட்டை (Walnut)
பார்ப்பதற்கு மனித மூளையின் சிறிய அளவுகள் போலிருக்கும் வாதுமைக் கொட்டை, மனித மூளைக்கு பல தேவையான நுண்ணூட்டங்களை வழங்குகிறது. இவற்றில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அறிவாற்றல் செயல்பாடை அதிகரித்து, வழக்கமாக குளிர்காலத்தில் ஏற்படும் மந்த நிலைக்கு எதிராக செயலாற்றுகிறது. மேலும், இவற்றில் உள்ள மெலடோனின், தூக்க முறைகளை ஒழுங்குபடுத்தி, குளிர் காலத்தின் நீண்ட இரவுகளில் நாம் நிம்மதியாக தூங்குவதை உறுதி செய்கின்றன.
பேரிச்சை
குளிர்காலத்தில், பேரிச்சை பழங்கள் இயற்கையான ஆற்றல் ஊக்கிகளாக உள்ளன. குளிர்கால சோம்பல் நிலைக்கு எதிராக போராட, இயற்கை சர்க்கரைகள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நமக்கு நீடித்த ஆற்றலை வழங்கக் கூடியது. உங்கள் சக்தியை தக்கவைத்துக் கொள்ள. பேரிச்சை பழங்களை காலை உணவுடன் அல்லது சிறுதீனியாக உட்கொள்ளலாம். பாதாம் பருப்புகள் போலவே பேரிச்சம்பழங்களும், குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வழங்க வல்லது.
உலர் ஆப்ரிகாட் பழங்கள்(பாதாமி பழங்கள்)
உலர் ஆப்ரிகாட் பழங்களில் உள்ள பீட்டா கரோட்டின், நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதுடன், குளிர்காலத்தில் சுவாச ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, ஆரோக்கியமான தோல் மற்றும் பார்வையை வழங்குவதால், குளிர்காலத்தில் உங்கள் உணவில் தவிர்க்க முடியாத உணவாக இது இருக்கிறது. தனியாக உட்கொண்டாலும் அல்லது நீங்கள் காலையில் உண்ணும் தானியங்களுடன் கலந்து கொண்டாலும், குளிர்ந்த மாதங்களில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்திக் கொள்ள உதவுகிறது.