LOADING...
மாதவிடாய் மற்றும் இரத்த தானம்: மருத்துவ உண்மைகளும், தவறான புரிதல்களும்
பெண்கள் இரத்த தானம் செய்வது குறித்து இன்றும் பல தவறான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன

மாதவிடாய் மற்றும் இரத்த தானம்: மருத்துவ உண்மைகளும், தவறான புரிதல்களும்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
07:04 pm

செய்தி முன்னோட்டம்

இரத்த தானம் என்பது பல உயிர்களை காக்கும் உன்னதமான பணியாகும். இருப்பினும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் இரத்த தானம் செய்வது குறித்து இன்றும் பல தவறான நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன. இது குறித்து மருத்துவர்கள் பொதுமக்களிடையே உள்ள சில முக்கிய கட்டுக்கதைகளை ஆதாரங்களுடன் தெளிவுபடக்கூறுகின்றனர். அது உங்கள் கவனத்திற்கு:

கட்டுக்கதை #1

கட்டுக்கதைகளும், உண்மைகளும்: #1

1. ஆபத்தானது: மாதவிடாய் காலத்தில் 30-80 மி.லி இரத்தம் மட்டுமே வெளியேறுகிறது. ஆனால் இரத்த தானத்தில் சுமார் 500 மி.லி இரத்தம் பெறப்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கும் பட்சத்தில், ஆரோக்கியமான உடல் இந்த இழப்பை விரைவாக ஈடுசெய்துவிடும். 2. இரத்தம் அசுத்தமாகும்: இரத்த தானத்தின் போது நரம்புகளில் இருந்தே இரத்தம் எடுக்கப்படுகிறது, கருப்பையிலிருந்து அல்ல. எனவே, மாதவிடாய் இரத்தம் தானமாகப் பெறப்படும் இரத்தத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. 3. அனுமதி மறுப்பு: எந்தவொரு இரத்த தான மையத்திலும் மாதவிடாயைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதில்லை. ஒருவரின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் ஹீமோகுளோபின் அளவே அங்கு தகுதியாகக் கருதப்படுகிறது.

கட்டுக்கதை #2

கட்டுக்கதைகளும், உண்மைகளும்: #2

4. வலி மற்றும் ரத்த சோகை: மிதமான மாதவிடாய் போக்கு உள்ளவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், அதிக இரத்தப்போக்கு அல்லது தசைப்பிடிப்பு இருப்பவர்கள் மட்டும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தானத்தைத் தள்ளிப்போடலாம். 5. முடிவு வரை காத்திருக்க வேண்டுமா?: மாதவிடாய் முடிந்த பிறகுதான் தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானத்திற்குப் பிறகு போதிய அளவு நீர் அருந்துவதும், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதும் விரைவான மீட்சிக்கு உதவும். இத்தகைய அறிவியல் பூர்வமான உண்மைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், பெண்கள் அச்சமின்றி இரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்.

Advertisement