இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா?
உடல்எடையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான், இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting). இதை முறையாக பின்பற்றினால், பல ஆரோக்கிய நன்மைகள் உண்டென்கிறார்கள் ஹெல்த் எக்ஸ்பர்ட்ஸ். இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது ஒரு விரத முறை. அதாவது, நீங்கள் உணவு உண்ட பிறகு, சில மணி நேரங்கள் எதுவும் சாப்பிடாமல் இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்வது தான் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் ஆகும். இதில் உணவு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்றாலும், உணவு உண்ணும் நேரக்கட்டுப்பாடு மட்டுமே உண்டு. இந்த வகை டயட்டை பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி ஒரு சிறு குறிப்பு. இந்த முறையில், கலோரி உட்கொள்ளுவது குறைக்கப்படுவதால், உடலில் உள்ள கொழுப்பு குறைந்து, எடை குறைய உதவுகிறது.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கின் நன்மைகள்
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கின் போது டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய், வயது தொடர்பான நரம்பு கோளாறுகள், குடல் நோய், புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்கள் தாக்கம் போன்றவை குறையும். இந்த உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பதால், உடலில் ஏற்படும், அழற்சி, வீக்கம் போன்றவை நீங்குகிறது. விரதம் இருப்பதால், உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைகிறது. அதனால், உடலில் கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் குறைகிறது. ஆராய்ச்சிகளின்படி, இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால், மனிதனின் ஆயுள் நீடிக்கிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்