NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்
    ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்
    வாழ்க்கை

    ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 01, 2023 | 07:25 pm 1 நிமிட வாசிப்பு
    ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்
    நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்

    சாலடுகள் என்பது எப்போதாவது சாப்பிடும் என்னவென்பது மாறி, தற்போது, தினசரி சாப்பாட்டில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் பலரும், அன்றாடம் ஏதேனும் ஒரு வகை சாலட்டை தயார் செய்து உண்பதை பார்த்திருப்பீர்கள். அதை சிறுவர்களும் தினசரி உண்ணலாம். பச்சை காய்கறிகளும், பழங்களும் அடங்கிய இந்த உணவு, அதன் வசீகரிக்கும் வண்ணங்கள், ருசி மற்றும் நறுமணங்கள் ஆகியவற்றோடு சேர்ந்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும் இந்த சாலட். உங்கள் பசியைத் தணிக்கும், உடலுக்கு ஊட்டமளிக்கும் ருசியான ஐந்து சாலட் வகைகளை இங்கே பார்க்கலாம்.

    சீசர் சாலட்

    சீசர் சாலட் என்பது, ஃப்ரெஷான ரோமெய்ன் லெட்டூஸ் இலைகளை, பார்மேசன் சீஸ் மற்றும் மொறுமொறுப்பான க்ரூட்டன்களுடன் சேர்த்து செய்யப்படுவது. இந்த சாலட்டின் முக்கிய மூலப்பொருள் ரோமெய்ன் லெட்டூஸ் என்றாலும், நீங்கள் பிரஸ்ஸல்ஸ் முளைகள், முட்டைக்கோஸ், தக்காளி, டோஃபு மற்றும் கொண்டைக்கடலை போன்ற புரத உணவுகளையும் சேர்க்கலாம். இந்த சாலட், இத்தாலிய உணவகமான சீசர் கார்டினி என்னுமிடத்தில் 1920 களில் அறிமுகம் செய்யப்பட்டதனாலேயே, இதற்கு இப்பெயர் வந்துள்ளது. கிரீமி, புளிப்பு மற்றும் மொறுமொறுப்பு என பலவித ருசிகள் இதில் அடங்கியுள்ளதால், உலகெங்கிலும் பல உணவகங்களில் இந்த சாலட் இடப்பெற்றிருக்கும்.

    கிரீக் சாலட் மற்றும் பாஸ்தா சாலட்

    கிரீக் சாலட்: ஆலிவ்கள், ஃபெட்டா சீஸ், குடைமிளகாய், வெள்ளரிகள், தக்காளி மற்றும் வெங்காயத்தின் கலவையான இந்த கிரீக் சாலட், மெடிட்டரேனியன் உணவு வகையை சேர்ந்தது. ஆலிவ் எண்ணெய், ஆர்கனோ மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்த இந்த சாலட், கோடை வெயிலிற்கு ஏற்ற புத்துணர்ச்சியூட்டும் சுவை கொண்டது. இதனுடன் லெட்டூஸ் சேர்த்தோ, சேர்க்காமலோ பரிமாறலாம். பாஸ்தா சாலட்: பாஸ்தா சாலடுகள் பெரும்பாலும் கார்க்ஸ்ரூ, எல்போ மற்றும் போ-டை பாஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பாஸ்தாவுடன் வினிகிரெட் கலந்து பரிமாறப்படும். அதனுடன், தக்காளி, குடைமிளகாய், பேபி கார்ன் மற்றும் பிற காய்கறிகளுடன் ஃபெட்டா போன்ற சீஸ் துண்டுகளும் கலந்து பரிமாறப்படும்

    கோல்ஸ்லாவ்

    பெரிய துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை முட்டைக்கோஸ், மயோனைஸ், வினிகர், சர்க்கரை, உப்பு மற்றும் மிளகு ஆகியவை கலந்து செய்வதுதான் இந்த சாலட் முட்டைகோஸை தவிர மற்ற பொருட்களை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். காரணம் இந்த சாலட்டின் முக்கிய பொருளே முட்டைகோஸ் தான். ஒரு சிலர், வண்ணமயமாக்க, சிவப்பு முட்டைக்கோஸ் அல்லது கேரட் சேர்ப்பதுண்டு. இந்த கோல்ஸ்லாவ் சாலட், பர்கர்கள் அல்லது சைனீஸ் உணவுகளுடன் பொருந்தி போகும்.

    பழ சாலட்

    பழ சாலடுகள் பல்வேறு பழங்களின் இயற்கை இனிப்பு மற்றும் சுவைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. பெர்ரி, முலாம்பழம், சிட்ரஸ் மற்றும் பிற பருவகால பழங்களை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட், உங்களை புத்துணர்ச்சியூட்டும், அதோடு வயிற்றை குளிர்விக்கும். இந்த சாலட் உடன் தேன், சில புதினா இலைகள் அல்லது ஒரு சிறிய இலவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் ஒரு சுவையை மெருகேற்றலாம். மற்ற சாலடுகளை போல அல்லாமல், இந்த சாலட்டை டெஸெர்ட் வகையாகவும் உண்ணலாம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆரோக்கியம்
    ஆரோக்கியமான உணவு
    ஆரோக்கியமான உணவுகள்
    ஆரோக்கிய குறிப்புகள்
    உணவு குறிப்புகள்
    உணவு பிரியர்கள்
    தேசிய ஊட்டச்சத்து வாரம்

    சமீபத்திய

    ஆரோக்கியம்

    ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் டயட்
    Intermittent Fasting: சாதக பாதகங்கள் என்ன? உடல் நலம்
    100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்  இந்தியா
    உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்  ஆரோக்கியமான உணவுகள்

    ஆரோக்கியமான உணவு

    மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா? உணவு குறிப்புகள்
    உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!  உணவு குறிப்புகள்
    வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்! ஆரோக்கியம்
    விராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன?  உணவு குறிப்புகள்

    ஆரோக்கியமான உணவுகள்

    அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சியுங்கள் வீட்டு வைத்தியம்
    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!  உடல் ஆரோக்கியம்
    வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம் உணவு குறிப்புகள்
    உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள் ஆரோக்கியம்

    ஆரோக்கிய குறிப்புகள்

    கட்டிப்புடி வைத்தியத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்  ஆரோக்கியம்
    உங்கள் ஆரோக்கியத்தை படம்பிடித்து காட்டும் நகங்கள் ஆரோக்கியம்
    உங்கள் சருமத்தில் தென்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் நீரிழிவு நோய்
    பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்  பேட்மிண்டன் செய்திகள்

    உணவு குறிப்புகள்

    இதுநாள் வரை நீங்கள் ருசித்த இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது இல்லை! உணவு பிரியர்கள்
    மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா? உணவு பிரியர்கள்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    தேசிய ஊட்டச்சத்து வாரத்தை 'Glance ஃபுட் ஃபேருடன்' கொண்டாடுங்கள்  ஆரோக்கியம்

    உணவு பிரியர்கள்

    வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல்  தேசிய ஊட்டச்சத்து வாரம்
    உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் உலகம்
    'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள் தேசிய ஊட்டச்சத்து வாரம்
    ஓணம் சத்யா: 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன? உணவு குறிப்புகள்

    தேசிய ஊட்டச்சத்து வாரம்

    ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை இந்தியா
    டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா? டயட்
    காலை உணவு என்பது ஏன் மிக முக்கியமானது? ஆரோக்கியம்
    உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையைப் பராமரிக்க உதவும் முக்கியக் காரணி ஊட்டச்சத்து
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023