
உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
உலக தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி இன்று(மார்ச்.,22)தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிமூலம் மக்களுக்கு தண்ணீர் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அவர் கூறியுள்ளதாவது, உயிர்வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது தண்ணீர்.
இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் தான் அடிப்படை ஆதாரம் என்று அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து, தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது பழமொழி.
நமது மனித உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சரியாக செயல்பட தண்ணீர் மிகமிக அவசியம்.
உணவின்றி கூட பலநாட்கள் இருக்கமுடியும்.
ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்கமுடியாது.
அத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
வீடியோ பதிவு
நீர் இல்லையேல் உயிர் இல்லை - தமிழை முதல்வர்
மேலும், நம்மை காக்கும் நீரை வீணாக்க கூடாது.
நீரினை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும்.
நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும்.
நீர் நிலைகளை முறையாக தூரிவாரி வைத்திருக்க வேண்டும்.
இன்றைய நிலையில் ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.
புவி வெப்பமாகி வரும் நிலையில், நம்மை காப்பது இந்த தண்ணீர் தான்.
நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை உணர்ந்து தண்ணீரை காப்போம்.
தாய் நிலத்தினை காப்போம், நன்றி என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
#WorldWaterDay2023-இல் #கிராமசபைக்கூட்டம் ஏன்? தமிழரும் தமிழ் இலக்கியங்களும் தண்ணீரைப் பற்றிச் சொன்னது என்ன?#SaveWater pic.twitter.com/WkplnsayQl
— M.K.Stalin (@mkstalin) March 22, 2023