Page Loader
திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண் 
திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண்

திருவண்ணாமலையில் தந்தையின் இறப்பு சான்றிதழை பெற தாலியை லஞ்சமாக கொடுத்த பெண் 

எழுதியவர் Nivetha P
May 16, 2023
11:36 am

செய்தி முன்னோட்டம்

திருவண்ணாமலை-செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் என்னும் கிராமத்தில் திலகவதி என்பவர் தனது 2 குழந்தைகளுடன் ஓர் குடிசைவீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் பட்டாவினை மாற்ற திலகவாதியின் தந்தையான பரசுராமனின் இறப்பு சான்றிதழினை கேட்டு கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் இன்று போய் நாளை வா என்னும் பதிலினையே கடந்த 11 மாதங்களாக கூறியுள்ளார்கள். இதனால் அதிகாரிகள் லஞ்சம் எதிர்பார்ப்பதாக எண்ணிய திலகவதி, தனது தாலியினை லஞ்சமாக வைத்துக்கொண்டு சான்றிதழினை கொடுங்கள் என்று மனுவோடு சேர்த்து தன்னுடைய தாலியை வைத்துக்கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியநிலையில், துணைவட்டாட்சியர் வெங்கடேசனை சஸ்பெண்ட் செய்த கோட்டாட்சியர் அனாமிகா, மனுதாரருக்கு அந்த சான்றிதழையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post