ஈத் அல்-பித்ர் 2026: இந்தியாவில் பிறை தெரியும் நாள் மற்றும் பெருநாள் தேதிகள் குறித்த விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
இஸ்லாமிய நாட்காட்டியின்படி, ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்படுவதை பொறுத்தே ஈத் பெருநாள் கொண்டாடப்படுகிறது. 2026-ஆம் ஆண்டில் இதற்கான உத்தேச தேதிகள் பின்வருமாறு: சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள்: பிறை பார்க்கும் நாள்: மார்ச் 18, 2026 (புதன்கிழமை). உத்தேசத் தேதி: புதன்கிழமை மாலை பிறை தென்பட்டால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் பெருநாள் மார்ச் 19, 2026 கொண்டாடப்படும். ஒருவேளை பிறை தென்படாவிட்டால், ரமலான் 30 நாட்களாக முழுமை பெற்று, மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) பெருநாள் கொண்டாடப்படும். வானியல் ஆய்வுகளின்படி மார்ச் 20 அன்று பெருநாள் அமையவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்தியா
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தெற்காசிய நாடுகள்
பிறை பார்க்கும் நாள்: மார்ச் 19 அல்லது 20, 2026. உத்தேசத் தேதி: வழக்கமாக சவுதி அரேபியாவிற்கு அடுத்த நாள் இந்தியாவில் பெருநாள் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்தியாவில் ஈத் பெருநாள் மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) அல்லது மார்ச் 21 (சனிக்கிழமை) அமைய வாய்ப்புள்ளது. வானியல் கணிப்புகளின்படி, இந்தியாவில் மார்ச் 21-ஆம் தேதி (சனிக்கிழமை) பெருநாள் கொண்டாடப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இறுதித் தேதியானது அந்தந்த நாடுகளின் தலைமை காஜிக்கள் அல்லது பிறை பார்க்கும் குழுக்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்குப் பிறகே உறுதி செய்யப்படும்.