NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 
    இந்தியா

    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 

    எழுதியவர் Nivetha P
    April 18, 2023 | 11:48 am 0 நிமிட வாசிப்பு
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை 
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை

    தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தின் ஓர் முக்கிய அங்கமாக கும்பகோணம் திகழ்கிறது. கடந்த 1868ம்ஆண்டு கும்பகோணம் ஜில்லாவாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கும்பகோணத்தில் தென்னகத்தின் கேம் பிரிட்ஜ் என கூறப்படும் அரசு கல்லூரி, நவகிரஹ கோயில்கள், புராதான சின்னங்கள், 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாசி மகாமகம், பல்வேறு கோயில்கள், உலக புகழ்பெற்ற விழாக்கள், வர்த்தகம் என அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளது. பல்வேறு அரசுத்துறை தலைமை அலுவலகங்களும், தனியார் வங்கிகளின் தலைமையகமும் இங்கு தான் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றமே கும்பகோணத்தில் தான் அமைந்துள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட கும்பகோணத்தினை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் 25 ஆண்டுகால போராட்டத்துடன் கூடிய கோரிக்கை ஆகும்.

    கும்பகோணத்தின் சிறப்புகள் குறித்து வழக்கறிஞர் ஜீவானந்தம் பேட்டி 

    இதுகுறித்து தஞ்சை வழக்கறிஞர் ஜீவானந்தம் அளித்துள்ள பேட்டியில், மாற்றம் என்பது வளர்ச்சி மற்றும் தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகும். தஞ்சையில் உள்ள அணைக்கரை போன்ற பகுதியில் உள்ளோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டுமென்றால் சுமார் 75கி.மீ.,பயணம் செய்யவேண்டும். அதுவே கும்பகோணம் தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டால் தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படும். அதுமட்டுமின்றி புதிய காவல்ஆய்வாளர் அலுவலகம், தனி ஆர்டிஓ.,அலுவலகம், புது பாலங்கள் போன்றவைகளும் அமையும். கும்பகோணத்திற்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கும். இதனால் மாவட்டரீதியாகவும் வளர்ச்சி பெறுவதோடு, பொதுமக்களும் பயனடைவர். மன்னர்கள் ஆண்ட பூமியாக, போர்கள் அதிகம் நடந்த இடமாக திகழும் கும்பகோணத்தினை நிதி பற்றாக்குறை காரணமாகவே தமிழக அரசு தனி மாவட்டமாக பிரிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம்  தமிழக அரசு
    தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வானிலை அறிக்கை
    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது ஈரோடு

    தமிழக அரசு

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்  திருப்பூர்
    முதன்முதலாக வந்த பேருந்து சேவை - கொண்டாட்டத்தில் பழங்குடி மக்கள்  மாவட்ட செய்திகள்
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு  சென்னை

    மாவட்ட செய்திகள்

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ரூ.3.5 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை  ஈரோடு
    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி - 1,250 காளைகள் பங்கேற்பு ஜல்லிக்கட்டு
    தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்த இலங்கை அரசு தமிழ்நாடு
    தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023