NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
    தமிழகத்தில் டிசம்பர் 29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

    ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழப்பு - டிசம்பர் 29ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    எழுதியவர் Nivetha P
    Dec 27, 2022
    10:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழுந்து காணப்பட்டது.

    இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு நகர்ந்து அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் தென் தமிழகத்தில் அதிக இடங்களிலும், வட தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை

    மேலும் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார்.

    சென்னையில் வெப்பநிலை அதிகப்பட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24லில் இருந்து 25வரை இருக்கக்கூடும்.

    இதனை தொடர்ந்து, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும்.

    இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வானிலை அறிக்கை

    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! தமிழ்நாடு
    17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை! தமிழ்நாடு
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை

    தமிழ்நாடு

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? ஸ்டாலின்
    'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம் இந்தியா
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025