Page Loader
சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 
சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

எழுதியவர் Nivetha P
Apr 20, 2023
08:53 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து, மு.க.ஸ்டாலின் அவர்களது அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாக வி.பி.சிங்கின் மனைவி சீதாகுமாரி, மகன் அபய்சிங், அஜயசிங் பேட்டி அளித்துள்ளனர். சென்னையில் அமைக்கப்படும் வி.பி.சிங் சிலையினை காண ஆர்வத்துடன் இருப்பதாக அவரது மனைவி சீதாகுமாரி நெகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார். வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என மனைவி சீதாகுமாரி தெரிவித்துள்ளார். முன்னதாக வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post