
வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
இன்று(செப்.,15) பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் தினத்தினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கிவைத்தார்.
இதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்த அவர் சின்ன காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு மாலை அணிவிக்க சென்றார்.
அப்போது அங்கு அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான அதிவரதர் வைபவம் நடந்த திருக்கோயிலான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அவர் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
அப்போது அந்த கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையானது தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதல்வர், அக்கோயில் அர்ச்சகர்கள் வழங்கிய பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
மு.க.ஸ்டாலின்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் பூரண கும்ப மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்#CMStalin #mkstalin #Kancheepuram #KancheepuramVaradharajaPerumalTemple #VaradharajaPerumalTemple #ibctamil pic.twitter.com/pMKs8X5xMm
— IBC Tamil (@ibctamilmedia) September 15, 2023