தமிழகத்திற்கு பட்ஜெட் ஜாக்பாட்: அதிவேக ரயில் முதல் ஆதிச்சநல்லூர் வரை
செய்தி முன்னோட்டம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. சரியாக 11 மணிக்கு அவர் தனது உரையை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். ஒவ்வொரு அறிவிப்புக்கும் நரேந்திர மோடி உட்பட மத்திய அரசை சேர்ந்தவர்கள் பலரும் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.
திட்டங்கள்
தமிழகத்திற்கு வெளியான அறிவிப்புகள்
ஆதிச்சநல்லூர் மற்றும் கலாச்சார மையங்கள்:தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதிச்சநல்லூர் உட்பட நாட்டில் 15 இடங்களில் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும். தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 60 தலங்கள் மேம்படுத்தப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டங்கள்:நாட்டின் 7 முக்கிய வழித்தடங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதில் தமிழகத்தில் மூன்று முக்கிய வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளன: சென்னை - பெங்களூரு ஹைதராபாத் - சென்னை ஹைதராபாத் - பெங்களூரு(தமிழக எல்லை வழியாக) அரிய வகை கனிமங்கள் மற்றும் ஆராய்ச்சி:தமிழகம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்வதற்கான பிரத்யேக ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். இது தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா
சுற்றுலா மேம்பாட்டிற்கான திட்டங்கள்
பழவேற்காடு ஏரி: இங்குப் பறவைகளைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக மையம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்புப் பாதைகள் அமைக்கப்படும். பறவைகளை கண்டு கழித்தபடி பயணிக்க ரயில் பாதைகள் அமைக்கப்படும். பொதிகை மலை: மலையேற்றப் பயிற்சிகள் மற்றும் சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடல் உணவுகள் ஏற்றுமதிக்கான வரிச் சலுகைகள் 1%-லிருந்து 3%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புற்றுநோய் மருந்துகளுக்குக் கூடுதல் சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 50% வரிப்பகிர்வு கோரிக்கை குறித்து நேரடி அறிவிப்புகள் இல்லையென்றாலும், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார ரீதியாகத் தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.