
கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்!
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஈரோடு பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது,
அது சிறிது நேரத்தில் வெடித்துவிடும் என்று கூறி தொலைபேசி அழைப்பினை துண்டித்துள்ளார்.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த தகவலினை ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து போலீஸ் சூப்பரண்ட் சசிமோகன் உத்தரவின் பேரில், அனைத்து போலீசாரும் குழுக்களாக பிரிந்து பஸ் நிறுத்தம், ரயில் நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
மோப்ப நாயான கயல் வரவழைப்பட்டும் வெடிகுண்டு உள்ளதா என்னும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தேடலில் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் சிக்கவில்லை.
அதன்பின்னரே இந்த தொலைபேசி அழைப்பு வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
15 நாட்கள் நீதிமன்ற காவல்
தினமும் உணவினை பெறுவதற்காக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்
இதனையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை கொண்டு போலீசார் அந்த மர்மநபரை தீவிரமாகத்தேடினர்.
நடத்தப்பட்ட விசாரணையில், போலி வெடிகுண்டுமிரட்டல் விடுத்த அந்த நபர் கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(34) என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அவர் திருப்பூர் பழைய பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக தகவல்கிடைத்ததன் பேரில், அங்கு திருப்பூர் போலீசார் விரைந்துசென்று சந்தோஷ்குமாரை கைதுசெய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், வேலையில்லாமல் வாழ்க்கையில் போராடி வருவதால் அந்த நபர் இந்த அழைப்பினை செய்துள்ளார்.
புரளி அழைப்பு விடுத்தால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பார்கள்.
சிறையில் உணவு தங்குதடையின்றி கிடைக்கும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று கூறியுள்ளார்கள்.
தற்போது அவர் நீதிமன்றக்காவலில் 15 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.