எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
நேபாளம் தலைநகரான காட்மாண்டுவில் இருந்து 'ஏசியன் ட்ரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்' தனது குழுவினருடன் உலகத்திலேயே மிகஉயரமான எவரெஸ்ட் சிகரம் ஏற செல்கின்றனர். இந்த குழுவோடு தமிழகத்தில் சென்னையில் இருந்து முத்தமிழ் செல்வி சென்று சிகரம் ஏறத்தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது பள்ளிப்பருவம் முதலே தடகள வீராங்கனையாக இருந்த இவர், 2021ம்ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் தினத்தினையொட்டி 155அடி உயரம் கொண்ட காஞ்சிபுரம் மலைப்பட்டு மலையில் கண்களை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார். விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முயற்சியாக அவர் இதனை செய்துகாட்டினார். தொடர்ந்து பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2021ம்ஆண்டு டிசம்பர் மாதமும் அவர் இமாச்சல பிரேதேசம், குலுமணாலி மலையில் இருந்து தனது இரு பெண்குழந்தைகளுடன் கண்ணை கட்டிக்கொண்டு 55நிமிடங்களில் கீழே இறங்கினார்.
குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்தபடி 1,389 முறை வில்அம்புகளை எய்த வீராங்கனை
இந்நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறச்செல்லும் இவர் நிதியுதவி வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையின் அடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரூ.10லட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. முத்தமிழ் செல்வி முன்னதாக கடந்த 2022ம்ஆண்டு வீரமங்கை வேலுநாச்சியார் பெருமையினை பரப்பிட குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்தபடி 1,389 முறை வில்அம்புகளை எய்து 87 புள்ளிகள் பெற்றார். அதேபோல் இமாச்சல் பிரதேசம், லடாக், காங்யெட்சேபீக் மலையில் 5,500 மீ.,வரை ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.