Page Loader
கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

எழுதியவர் Nivetha P
Apr 10, 2023
11:31 am

செய்தி முன்னோட்டம்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் பல நல திட்டங்களை அப்பகுதி மக்களுக்காக செய்து வருகிறார். அதில் ஒன்றாக உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகத்தினை உருவாக்கியுள்ளார். இந்த நூலகத்தினை உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கடந்த 8ம் தேதி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். 'வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்' என்னும் முழக்கத்துடன் இந்த நூலகமானது துவக்கி வைக்கப்பட்டது. வாரம் முழுவதும் இந்த நடமாடும் நூலகமானது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்