மார்ச் 28 முதல் விஜய்யின் அதிரடி பிரசாரம்: பெரம்பூர் முதல் விருகம்பாக்கம் வரை தவெக 'ரூட் மேப்'
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது முதல் கட்டப் பிரசாரத்தை மார்ச் 28 சென்னையில் தொடங்குகிறார். அன்று ஒரே நாளில் ஐந்து முக்கியத் தொகுதிகளில் அவர் வாக்குச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். சென்னையில் பத்து தொகுதிகளில் பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போது 5 தொகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாரம் செய்யக் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன் விவரம்: காலை 10:00: பெரம்பூர் (விஜய் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் தொகுதி) பகல் 01:00: கொளத்தூர் பகல் 02:00: வில்லிவாக்கம் பிற்பகல் 03:00: அண்ணா நகர் மாலை 04:00: விருகம்பாக்கம்
பாதுகாப்பு
பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 3,000 தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பிரசாரத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், தவெக இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. புதுச்சேரிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான முதல்கட்டப் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியாகும் எனத் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.