"ச.ஜோசப் விஜய் எனும் நான்..": நாளை காலை 11:30 மணிக்கு விஜய் முதல்வராகிறார்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனது கட்சியில் இருக்கும் 108 MLA க்களின் ஆதரவையும், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் சமர்பித்ததாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, ஆளுநர் அவரை விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, விஜய் நாளை காலை முதல்வராக பதவி ஏற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடக செய்திகளின்படி விஜய் மற்றும் TVK பிரதிநிதிகள் நாளை காலை 11:30 மணியளவில் MLA க்களாக பதவியேற்பர். இந்த விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
TVK chief Vijay meets Governor Rajendra Arlekar, stakes claim to form govt in Tamil Nadu
— ANI Digital (@ani_digital) May 6, 2026
Read @ANI Story | https://t.co/qQEBokhiuX#TVK #Vijay #TamilNadu #TNGovernor #RajendraArlekar pic.twitter.com/644Xjggioo
உரிமை கோரல்
ஆளுநருடன் சந்திப்பு மற்றும் உரிமை கோரல்
இந்தச் சந்திப்பின் போது விஜய்யுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் சென்றிருந்தனர். ஆளுநரைச் சந்தித்த விஜய், தங்களுக்கு 108 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி கடிதத்தைச் சமர்ப்பித்தார். ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு சால்வை அணிவித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பதவியேற்பு விழா
பிரம்மாண்ட பதவியேற்பு விழா
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (மே 7) காலை 11:30 மணி அளவில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்கிறார். அவருடன் சுமார் 10 முதல் 12 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பாதுகாப்புப் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
காலக்கெடு
நம்பிக்கை வாக்கெடுப்பு காலக்கெடு
ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள விஜய்க்கு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 2 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் தவெக எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக விஜய் அரியணையில் அமர்வது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.