"கிரிக்கெட்டில் சிஎஸ்கே... தேர்தலில் தவெக!": தஞ்சாவூர் தவெக கூட்டத்தில் தலைவர் விஜய் பேச்சு
செய்தி முன்னோட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் களம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றை ஒப்பிட்டு சுவாரசியமாகவும், காரசாரமாகவும் பேசினார். "தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு என நான் கூறியது நாம் தான் இந்த மண்ணின் உண்மையான பிரதிநிதி என்பதற்காகத்தான். நான் ஸ்டாலினை எதிர்த்துப் பேசினால், உடனடியாக பாஜகவுக்காக பேசுவதாகக் கூறுகிறார்கள். டெல்லியை பற்றி ஏன் பேச வேண்டும் என கேட்கிறார்கள். ஆனால், வருமான வரித்துறை சோதனை (IT Raid) வந்தால் மட்டும் டெல்லிக்கு வெள்ளைக்கொடி பிடிக்கிறார்கள்," என திமுகவை சாடினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஓம் சக்தி, பராசக்தி , திமுக ஒரு தீயசக்தி 😂#சோழநாட்டில்_தளபதி pic.twitter.com/dfnLXFRtnX
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 4, 2026
சிஎஸ்கே
சிஎஸ்கே உடன் ஒப்பீடு
அரசியல் களத்தைக் கிரிக்கெட் மைதானத்தோடு ஒப்பிட்டுப் பேசிய விஜய், "தமிழ்நாட்டு அணியைத் (CSK) டெல்லி அணியால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே என்றால், தேர்தலில் விசில் போடப் போவது தவெக தான். தேர்தலில் அனைத்து அணிகளையும் தவெக அடித்து நொறுக்கும்," எனத் தெரிவித்தார். மேலும், 'ஓம் சக்தி திமுக ஒரு தீய சக்தி' எனச் சிறு குழந்தைகள் கூடச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் என விமர்சித்தார். "எனக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்பது அக்கா, தம்பி, அண்ணன், தங்கை போன்ற ஆழமான உறவு. மற்றவர்களுக்கு இது தேர்தலாக இருக்கலாம், ஆனால் எனக்கும் என் மக்களுக்கும் இது ஒரு எமோஷன்" என நெகிழ்ச்சியுடன் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Special moment for Tvk & CSK Mutuals 💛
— Vijay Fans Trends (@VijayFansTrends) March 4, 2026
pic.twitter.com/xm0a4jVJSC