தமிழக தேர்தல் 2026: அதிமுக - NDA- தவெக கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப் போவதாகவும், அதற்கு பதிலாக 50 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி கேட்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இந்தத் தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ள தவெக,"அதிமுக, பாஜக, சசிகலா அல்லது பாமக ஆகிய தரப்பினருடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் லாபத்திற்காகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிக்கவும் திமுக-வினரால் இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன" என அறிக்கை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"கல்லாப் பெட்டி" கனவுகளும்...
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) March 16, 2026
கற்பனைப் போர் வீரர்களும்!
தமிழக அரசியல் களத்தில் ஒரு மாபெரும் புயலாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சில ஊடகங்கள் தங்களின் டிஆர்பி…
கூட்டணி
"எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எந்த மட்டத்திலும் கூட்டணி இல்லை"
அதோடு, எந்தவொரு அரசியல் கட்சியுடனும் எந்த மட்டத்திலும் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை என்பதை தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது X பக்கத்தில் செய்தி வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும். அதிமுக ஏற்கனவே பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், "பிஜேபி எமது கொள்கை எதிரி; திமுக எமது அரசியல் எதிரி" என ஏற்கனவே அறிவித்துள்ள விஜய், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கி நடத்தி வருகிறார்.