நடிகர் விஜய்யின் கடைசி நாள் பிரச்சாரம்: சென்னையில் இன்று மெகா ரோடு ஷோ! தவெக தொண்டர்களுக்கு கட்டுப்பாடு!
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. திரைத்துறையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது முதல் 'அக்னி பரீட்சையை' எதிர்கொள்ளும் வகையில் இன்று சென்னையில் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார். 4 முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், விஜய் தனித்துப் போட்டியிட்டுத் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் இன்றைய பிரசாரம் அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இன்றைய ரோடு ஷோ
விஜய்யின் இன்றைய பிரசாரப் பயணம்
விஜய், இன்று, சென்னையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மதியம் 12 மணி முதல் மாலை வரை சென்னையின் முக்கியப் பகுதிகளில் விஜய் வாகனப் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளார். பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு மற்றும் ஜூனிஸ் சாலை சந்திப்பு வழியாக அவர் வாக்குச் சேகரிக்கிறார்.
QR கோடு அனுமதி சீட்டு
நிர்வாகிகள் கூட்டம்
ரோடு ஷோவைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு சைதாப்பேட்டை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க QR கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளில் பூத் கமிட்டி செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளார்.
தேர்தல் வியுகம் மற்றும் அரசியல் நிலைப்பாடு
தவெக தலைமையின் உத்தரவு
விஜய்யின் பிரசார வாகனத்தைச் சோதனையிடும் வகையில் இருசக்கர வாகனங்களில் யாரும் பின்தொடரக் கூடாது எனத் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தொண்டர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். வெப்பம் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டுச் சமூக வலைத்தளங்களில் நேரலையில் காணுமாறு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.