வரலாற்று பிரியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு; சோழர் வழித்தடத்தை ஆராயும் 'கிரேட் சோழா சர்க்யூட்'
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வரலாற்று பிரியர்களுக்கான 'கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.
நாளை, மார்ச் 2ஆம் தேதி முதல் துவங்கவுள்ள இந்த சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர், 9489129765 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவில் பங்குகொள்ள தமிழ்நாட்டின் எந்த பகுதியில் இருந்து இருந்தாலும் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்தவர்கள் தங்களின் சொந்தச் செலவில் தஞ்சாவூர் சென்றடைய வேண்டும்.
அங்கிருந்து சுற்றுலாத் துறை சார்பில், ஒரு சொகுசு பஸ்ஸில் பயணம் மேற்கொள்ளப்படும்.
விவரங்கள்
சோழா சர்க்யூட் சுற்றுலா விவரங்கள்
இந்த சுற்றுலா, தினசரி இருக்கும் எனவும், காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை 7:00 மணிக்கு முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் பயணிகள், தஞ்சை பெரிய கோவில், பழையாறை, உடையலுார், தாராசுரம், சோழர் மலை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஒரு நபருக்கு, 1,500 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு நாள் தஞ்சை சுற்றுலாவில் பங்கேற்போர், சோழர்களின் காலத்து முக்கிய பகுதிகளைப் பார்வையிட முடியும். பயணத்தின் போது காலை மற்றும் மதிய உணவுகள் வழங்கப்படும்" என்றார்.