
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம்
செய்தி முன்னோட்டம்
திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆண்டாள் மற்றும் லட்சுமி என்னும் 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ஆண்டாள் யானைக்கு நேற்று 44வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்களுக்கு ஆண்டாள் கூடையில் சாக்லேட்டுகளை தூக்கிக்கொண்டு வந்து கொடுத்தது.
அதனை கண்டு அங்கிருந்தோர் மெய்மறந்து ஆண்டாள் யானையை ரசித்துள்ளனர்.
இதனை பார்த்த சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் சாக்லேட்டுகளை எடுத்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஆண்டாள் யானையை கண்டு நெகிழ்ச்சி அடைந்த பொதுமக்களும் கோயில் ஆணையரும் அதற்கு பிடித்த பழங்களை வழங்கினர்.
புத்திசாலியான யானை
முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் சுமந்த ஆண்டாள் யானை
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு தொழில் அதிபர் ஒருவரால் தானமாக கொடுக்கப்பட்ட இந்த ஆண்டாள் 17ம் தேதி அக்டோபர் மாதம் 1986 அன்று ஸ்ரீ ரங்க பெருமாளுக்கு தனது முதல் சேவையினை செய்ய துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுத்து சாமிக்கு ஆண்டாள் யானை அளித்துள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.
தனது 8 வயதில் இந்த கோயிலுக்கு சேவை செய்ய துவங்கிய இந்த ஆண்டாள் யானை மிகவும் புத்திசாலியானது.
தன்னை 8 ஆண்டுகளாக பராமரித்து வரும் பாகன் ராஜேஷ் மலையாளம் மற்றும் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்டாள் யானையானது தலையை அசைத்தும், குரல் எழுப்பியும் பதில் சொல்லும் வீடியோ அண்மையில் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.