
ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் அஜ்மீரில் நேற்று(மார்ச்.,21) கண்காட்சி ஒன்றில் செங்குத்தான கம்பத்தில் சுழன்று கொண்டே மேலெழும்பும் ராட்டினம் ஒன்று உயரத்திற்கு சென்றது.
மேலே இருந்து கீழே வரும்போது எதிர்பாராவிதமாக அந்த ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கண் இமைக்கும் நேரத்தில் மேலே இருந்து கீழே விழும் இந்த ராட்டினத்தில் பயணம் செய்தோர் பயத்தில் அலறினர்.
அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த அனைவரும் ஓடி சென்று அவர்களுக்கு உதவியுள்ளனர்.
இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளார்கள். காயமுற்றவர்களை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம்
#Ajmer Breaking
— Siraj Noorani (@sirajnoorani) March 21, 2023
Around 25 people were injured after a swing collapsed in Ajmer, #Rajasthan. condition of 8 critical#India #accident #viral #viralvideo pic.twitter.com/Wa0cyEeG9o