சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத்
சென்னையை அடுத்த ஓ.எம்.ஆர். பகுதியில் இயங்கி வரும் ஐடி கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருபவர் சித்தார்த் கண்டோத்(24). இவருக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுமாம். இவர் மாதத்திற்கு இரண்டு முறையாவது பயணம் மேற்கொண்டு விடுவாராம். சுற்றுலா பயணங்கள் குறித்து அவர் கூறியதாவது, நான் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள நிறைய சேமித்து வைத்திருந்தேன். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு எந்த வெளிநாட்டுக்கும் செல்ல முடியாத நிலை உண்டானது. தற்போது பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டாலும், பயணம் குறித்த என்னுடைய முழு பார்வையும் கொரோனாவிற்கு பிறகு மாறிவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் அவர் ஒவ்வொரு மாதமும் இரண்டு சிறு பயணங்களையாவது மேற்கொண்டு விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
கேம்பிங் ட்ரிப்களை மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள்
அதன்படி அவர் கடந்த மாதம் திருவள்ளூரில் உள்ள மூல கோனா நீர்வீழ்ச்சிக்கும், கும்மிடிப்பூண்டியில் உள்ள தடா நீர்வீழ்ச்சிக்கும் சென்றுள்ளார். திருவண்ணாமலையில் கேம்பிங் ட்ரிப்பும் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து இம்மாதம் அவர் ஈ.சி.ஆர். பகுதியில் உள்ள ஒரு தீவிற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான அருகில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் காரணங்களால் செலவும் குறைவாகவே ஆகும் என்றும் அவர் கூறுகிறார். சென்னை சுற்றுலாத்துறை மக்கள் மத்தியில் இந்த சிறு சிறு சுற்றுலா செல்வதில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களை தொழித்துறை கண்டறிந்து, தற்போது மலையேறும் பயணங்கள் போன்றவற்றை குழுவாக சென்று மேற்கொள்ள அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறது.