
தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை விதித்த தலைமை ஆசிரியை - வைரல் வீடியோ
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு வரும் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைத்து வந்தால் அவர்களை கண்டித்துள்ளார்.
இது குறித்து அறிந்த பெற்றோர்கள் வந்து அவரிடம் கேட்கையில், விபூதி பூசக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த உத்தரவு நகலை நோட்டிஸ் பலகையில் ஒட்டி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் திமுக' அரசின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழக பள்ளியில் இந்து மாணவர்கள் குங்குமம், விபூதி வைக்க தடை
திருநீறு பூசவோ குங்குமம் வைக்கவோ கூடாது என தமிழக அரசு அரசாணை உள்ளது என கூறும்
— Sevak Sathya (@Sevakofmata) February 21, 2023
பள்ளி தலைமை ஆசிரியர். pic.twitter.com/R03lYbXCfx