
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை அதிகரித்து வழங்கவுள்ளதாக தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 7,500 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது வரை ஆதி திராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் 221 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு
குட் நியூஸ்! தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு!! https://t.co/WIByjaSg4A
— newstm (@newstmlive) March 16, 2023